செவ்வாய், 25 செப்டம்பர், 2012

சகோதர யுத்தத்தை’ யாழ்ப்பாணத்தில் பார்த்ததே இல்லையா? லிபியாவில் பாருங்கள்!

Viruvirupu
 கருணாநிதி, “சகோதர யுத்தத்தால் ஈழப் போராளி அமைப்புகள் பலமிழந்து அழிந்தன” என்று அவ்வப்போது சொல்லுகிறார்.
அந்த வாக்கியம் பெரும்பாலும் அவர்மீது கிண்டல் செய்வதற்கே பெரும்பாலும் பயன்படுகின்றது. அதன் பின்னால் பெரிய அர்த்தம் உள்ளது பலருக்கு புரியவில்லை. நிஜமாகப் புரிந்தவர்கள், புரிந்த மாதிரி காட்டிக்கொள்ள விரும்புவதில்லை
“லிபியாவில் அரசு ராணுவத்தின் அங்கீகாரம் பெற்றிராத அனைத்து தீவிரவாத அமைப்புகளும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் தத்தமது முகாம்களை காலி செய்துகொண்டு, ஆயுதங்களையும் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்” இந்த அறிவிப்பு லிபியா ஜனாதிபதி மொஹாமெட் எல்-மெகாரெஃப்பிடம் இருந்து வந்துள்ளது.
அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் லிபியாவின் பென்காசி நகரில்தான் முதலில் ஆரம்பமாகியது. அதன் பின்னணியில், சில தீவிரவாத அமைப்புகள் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. அது உண்மைதான் என்பதும், உளவு வட்டாரத் தகவல்களில் இருந்து தெரியவருகிறது. தீவிரவாத அமைப்புகளை அந்த நாட்டுக்குள் இயங்க விடக்கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
லிபிய அரசு, தீவிரவாத இயக்கங்களை இந்த காரணத்தை வைத்துக் கொண்டு அப்புறப்படுத்திவிட நினைக்கிறது.
லிபிய அரசு, இந்த இயக்கங்களை அப்புறப்படுத்துவதற்கு வேறு காரணங்களும் உள்ளன. முக்கியமாக காரணங்களில் ஒன்று இந்த இயக்கங்கள் தமக்கிடையே போட்டுக்கொள்ளும் சண்டைகள். சண்டையென்றால், சும்மா கைகலப்புகள் அல்ல. இவர்கள் பீரங்கிகளாலேயே சுட்டுக் கொள்கிறார்கள்.
அந்தளவுக்கு ஆயுதங்களும் அவர்களிடம் உள்ளன.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, “சகோதர யுத்தத்தால் ஈழப் போராளி அமைப்புகள் பலமிழந்து அழிந்தன” என்று அவ்வப்போது சொல்லுகிறார்.
அந்த வாக்கியம் பெரும்பாலும் அவர்மீது கிண்டல் செய்வதற்கே பெரும்பாலும் பயன்படுகின்றது. அதன் பின்னால் பெரிய அர்த்தம் உள்ளது பலருக்கு புரியவில்லை. நிஜமாகப் புரிந்தவர்கள், புரிந்த மாதிரி காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.
80களின் இறுதியில், இலங்கையில் ஈழவிடுதலை இயக்கங்கள் தமக்கிடையே மோதிக்கொண்டன. டெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் இலங்கையிலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் தலைவர் பத்மநாபா சென்னையிலும் கொல்லப்பட்டனர். அந்த அமைப்புகளின் உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
அதைப்பற்றி இப்போது கிளறுவதில் அர்த்தமில்லை. காரணம், அவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் கொல்வதற்கு உத்தரவிட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள். சகல இயக்கங்களும், பேப்பரிலும், சில அபிமானிகளின் கற்பனையிலும்தான் உள்ளன. அதனால் ஏதும் பாதகம் இல்லை.
கருணாநிதி கூறும் ‘சகோதர யுத்தம்’ யாழ்ப்பாணத்தில் உச்சக்கட்டத்தில் நடந்தபோது, உங்களில் எத்தனைபேர் நேரில் பார்த்திருப்பீர்களோ தெரியாது. சக ஈழவிடுதலை இயக்கப் போராளிகளை, வீதியில் உயிருடன் டயர் போட்டு எரித்த கதைகளும் உங்களுக்கு தெரிந்திருக்குமோ தெரியாது.
எல்லாமே Every action has an equal reaction என்ற வகையில் முடியும் என்று முடிந்து விட்டன.
முடிந்த கதையை விடுங்கள். நடக்கும் கதைக்கு வருவோம். தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய ‘சகோதர யுத்தத்தை’ யாழ்ப்பாணத்தில் பார்க்க தவறியிருந்தால், இப்போது லிபியாவில் பார்க்கலாம்.
லிபியாவில் பெரிதும், சிறிதுமாக பல தீவிரவாத அமைப்புகள் வெளிப்படையாக இயங்குகின்றன. முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு எதிரான புரட்சியில், இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக போராடித்தான் வெற்றி பெற்றிருந்தன.
யுத்தம் நடைபெற்றபோது, இந்த தீவிரவாத இயக்கங்கள் தத்தமது பலத்துக்கு தக்கபடி, கடாபி ஆதரவு ராணுவத்தின் ராணுவ முகாம்களை கைப்பற்றின. அங்கிருந்த ராணுவத்தினரை கொன்றுவிட்டு, தமது தீவிரவாத இயக்கங்களில் முகாம்களாக இந்த ராணுவ முகாம்களை மாற்றிக் கொண்டன.
கடாபி ஆதரவு ராணுவத்துக்கு எதிரான யுத்தம் வெற்றி பெற்றபின், யுத்தத்தில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புகள் அனைத்தும், சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் மக்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது. ‘நம்ம பையன்கள்’ என்று மக்களும், தீவிரவாத அமைப்பினரும் நெருக்கமாக இருந்தனர்.
ஆனால், சுதந்திரமாக அலுவலகம் எல்லாம் வைத்துக் கொண்டு இயங்கிய இவர்களுக்கு இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படவே, தொடங்கியது சகோதர யுத்தம்.

கருத்துகள் இல்லை: