ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

அதிகரித்து வரும் காதல் கொலைகள் மீண்டும் ஒரு இளம் பெண் படுகொலை; கொலையாளியும் தற்கொலை!


 அந்த  காலத்தில் இருந்து சிம்பு காலம் வரை ஏறக்குறைய அத்தனை படங்களும் பெண்களை ஒரு போகபோருளாக பாவித்து காம வக்கிரத்தை அரங்கேற்றிய பாவத்தை இப்போது அறுவடை செய்கிறோம் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் இந்தியா முழுதும் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.கோவையில் 21 வயது இளம்பெண் சுருதி மேனன் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவையை அடுத்த வடவள்ளி கல்வீரம் பாளையம் தோப்பில் நகரை சேர்ந்தவர் ராஜீவ்மேனன். டெல்லியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லதா(வயது 43). இவர்களுடைய மகள் சுருதி(21).இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஐ.பி அவருடன் கோவை காளப்பட்டியை சேர்ந்த அயூப் மகன் அஜீம்(21) என்பவரும் படித்தார்.இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜீமுடன் பழகுவதை சுருதி குறைக்கத் தொடங்கினார்.இதனையடுத்து ஆத்திரமடைந்த அஜீம் நேற்று மாலை சுருதியின் வீட்டுக்குச் சென்றார். முதலில் பேசிப்பார்த்தார் சுருதி அஜீமை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் கத்தியை எடுத்தார். சுருதியின் தாயார் அஜீமைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.பிறகு சுருதியையும் கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் அஜீம்.இதில் பரிதாபம் என்னவெனில் உடல் நமமில்லாத சுருதியின் தாத்தா தட்டுத் தடுமாறி எழுந்து வந்து பக்கத்திலிருப்பவர்களை முடியாமல் அழைத்துள்ளார்.பிறகு போலீஸுக்குத் தக்வல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சுருதி, அஜீம் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லதாவை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து லதா ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.>பெற்றோரின் அறிவுரைக்கு இணங்க சுருதி காதலை மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அஜீம் பிடிவாதமாக சுருதிய துரத்தி வலுக்கட்டாயப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.குறைந்தது வாலிபர்கள் விருப்பமில்லாத பெண்ணை தொந்தரவு செய்வதை தவிர்க்கும் மனோபக்குவத்தை வளர்த்துக் கொண்டால்தான் இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும்<

கருத்துகள் இல்லை: