காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோவிலில் மத்திய நிதி அமைச்சர்
ப.சிதம்பரம் சார்பில் ரகசிய யாகம் நடத்தியதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோவில். இந்த கோவிலில் கடந்த 24ம் தேதி காலை ஏகாதச ருத்ர பூஜை நடைபெற்றுள்ளது. எதிரிகளை வீழ்த்தவும், அதிரடி முடிவுகளை எடுக்கவும், முக்கிய அரசுப் பதவியில் அமரவும் தான் இது போன்ற பூஜைகளை முக்கியப் புள்ளிகள் நடத்துவார்கள் என்று கூறப்படுகின்றது. தற்போது நடந்துள்ள இந்த பூஜை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்காக நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தனது குடும்பத்தோடு தேனி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்குச் சென்று யாகம் நடத்திவிட்டு சென்றார் சிதம்பரம்.
அடுத்து, 2 ஜி வழக்கில் சிதம்பரத்தை சிக்கவைக்க நாலா பக்கமும் சதிவலைகள் பின்னப்பட்ட நேரத்தில் திருப்பதிக்குச் சென்று வெங்கடாச்சலபதியை தரிசனம் செய்து மனம் உருகி வேண்டினார்.
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தின் மானகிரி தோட்டத்தில் சிவாச்சாரியார்களை வைத்து பெரிய அளவில் யாகத்தை அவரது மகன் கார்த்தி நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை சிதம்பரம் தரப்பினர் அடியோடு மறுக்கின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக