ரஜினிக்கு சம்பளம் ரூ 240 கோடி? - பரபரக்கும் கோலிவுட்! http://tamil.oneindia.in/movies/heroes/2012/10/rajini-s-salary-is-rs-240-crore-162458.html
ஒட்டு மொத்த இந்தியாவிலேயே (நம்புவோம் நம்புவோம்)அதிக வசூலை ஈட்டிய படம் ரஜினி நடித்த எந்திரன். அதற்கு முன்பு சிவாஜி, வசூலில் பல சாதனைகளைப் படைத்து இந்திய திரையுலகினரை வியக்க வைத்தது (நம்புவோம் இதையும் நம்புவோம்) .
இப்போது ரஜினி நடித்துவரும் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக வெளியாகும் நிலையில் உள்ளது.
ரஜினியை வைத்து படமெடுத்தால், அது உலக அளவிலான பெரும் வசூலுக்கு உத்தரவாதம் என்பதால், அவருக்கு எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர் நம்புவோம் இன்னமும் நம்புவோம் .
இந்த நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் யாரும் கேட்டிராத பெரும் தொகையான ரூ 240 கோடியை சம்பளமாகத் தர சக்சேனா முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொசுறு: ரஜினியின் புது பட பூஜைக்கு ஒபாமா வந்திருக்காக ஹிலாரி வந்திருக்காக புடின் வந்திருக்காக சர்தாரி வந்திருக்காக பட்டைய கிளப்பவேண்டியதுதான் காசு கொடுத்து பார்க்க நாம இருக்கோம்ல
சமீபத்தில் ரஜினியைச் சந்தித்தாராம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. தனக்கு 30 நாட்கள் மட்டும் கால்ஷீட் தந்தால் போதும், ஒரு புதிய மெகா பட்ஜெட் படத்தை உருவாக்கிவிடுவேன் என்று கூறினாராம்.
இந்தப் படத்தில் ரஜினியுடன் தெலுங்கின் டாப் நடிகர் ராம்சரண் தேஜாவை நடிக்க வைக்கத் திட்டமாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நேரடியாக வெளியிட்டு, இந்த பெரும் தொகையை வசூலிக்கத் திட்டமாம்.
விஷயத்தைக் கேட்ட ரஜினி, யோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டாராம்.
சக்சேனா சொல்லும் கணக்குப்படி பார்த்தால் ரஜினிக்கு ஒரு நாளைக்கு ரூ 8 கோடி சம்பளம். ஹாலிவுட்டில் முதல் நிலை நடிகர்களுக்கு இணையான சம்பளம் இது.
இதுகுறித்து சாக்ஸ் பிக்சர்ஸ் தரப்பில், "இந்த திட்டம் குறித்து இப்போதே கருத்து சொல்வது சரியல்ல. பேசிக் கொண்டிருக்கிறோம். ரஜினி சார் சரி என்றதும், ராம்சரண் தேஜாவை அணுகப் போகிறோம்," என்று தெரிவித்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக