விழுப்புரம்:
செம்மண் குவாரியில் அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய புகாரில் பல
நாட்களாக தலைமறைவாக இருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி இன்று
போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகெ செம்மண் குவாரி நடத்திய பொன்முடி, அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் அள்ளியதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் க. பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மகனுடன் பொன்முடி தப்பி ஓடி தலைமறைவானார். தொடர்ந்தும் அவர் தலைமறைவாக இருந்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது மாமியார் ஊரில் பொன்முடி பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொன்முடி, அவரது மகன் கவுதசிகாமணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி சரணடைய வேண்டிய நிலை உருவானது.
இதனால் வெளியே வந்த பொன்முடி இன்று காலை செஞ்சியில் நடைபெற்ற திமுகவினரின் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் விழுப்புரத்துக்கு சென்றார். அங்கு அவரை போலீசார் செம்மண் கொள்ளை வழக்கில் கைது செய்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக