இயக்குனர் தங்கர்பச்சான்
இயக்கும் புதிய படம் ‘அம்மாவின் கைப்பேசி’. சாந்தனு, இனியா, ரேவதி
உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரோஹித் குல்கர்னி இசை. இப்படத்தின் பாடல் கேசட்
வெளியீட்டு விழா நேற்று நடந்தது.பின்னர் தங்கர்பச்சான்
பேசியபோது, ‘’இன்றைக்கு தயாரிப்பாளர் கிடைப்பது கடினம். நான்கைந்து
பேர்தான் படம் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் தாங்கள் வாங்கிய
கடனுக்காக தயாரிக் கிறார்கள். தமிழ் சினிமா உயிரற்ற நிலையில் கிடக்கிறது.நடிகர்கள் கிடைப்பது
கடினமாக இருக்கிறது. ஒரு படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடத்த
மட்டுமே எனக்கு ரூ.23 லட்சம் செலவானது. எது மக்களுக்கு தேவை இல்லையோ அதற்கு
பல கோடி செலவு செய்கிறார்கள்.
ஒரு பாடல் காட்சிக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்ப வர்கள் ‘பாரதி’ படத்துக்கு ஒன்றறை கோடிதான் ஒதுக்குகிறார்கள்.‘பெரியார்’ படம்
தயாரிக்கவும் கஷ்டப்பட்டார்கள். நெருக்கடி யான சூழலில்தான் நல்ல படங்கள்
வருகி றது. நான் இயக்கிய ‘அழகி’ படத்தை வாங்க ஆள் இல்லை. அப்படி வாங்கிச்
சென்றவர்கள் மறுநாள் என் அலுவலகத்தின் எதிரே நடுரோட்டில் பட பெட்டிகளை வீசி
விட்டு சென்றார்கள். >படம் ரிலீஸ் ஆகி ஓடிய பிறகு மீண்டும் அப்படத்தை வாங்க ஓடி வந்தார்கள்.இன்றைக்கு
நடிகர்கள் முகத்தை காட்டி மாட்டுக்கு விலை பேசுவதுபோல் படத்துக்கு விலை
பேசி கைமாற்றிக் கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ‘அம்மாவின்
கைப்பேசி’ உங்களின் ஆன்மாவை தொடும்’’என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக