தினமலர் செய்திகள: நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம் இதில் உள்ளதெல்லாம் கற்பனையா அல்லது வழக்கமான சிண்டு முடியும் தந்திரமா என்பதுவும் உங்களின் ஊகத்திற்கே விடுகிறோம்
ஸ்பெக்ட்ரம் விவகாரம், "டெசோ' மாநாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்,
தங்களுக்கு நெருக்கடி கொடுத்த காங்கிரஸ் கட்சியை, "கை' கழுவ தி.மு.க.,
முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க., அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அக்கட்சிகள் மத்தியில் உறவு நெருக்கமாக இல்லை.>ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களை பலிகடா ஆக்கிவிட்டதாக தி.மு.க., தரப்பில் தொடர் பொருமல் இருந்தாலும், அதை வெளிக்காட்ட உரிய சந்தர்ப்பம் கிடைக்காததால் கருணாநிதி அமைதி காத்து வந்தார். அதே நேரத்தில், கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வை அவ்வப்போது காங்கிரஸ் சீண்டிக் கொண்டே இருந்தது.
தேர்தல் தோல்வியால் துவண்டு போன தி.மு.க., இலங்கைத் தமிழர் விவகாரத்தை கையில் எடுத்தது. அவர்களுக்காக, " டெசோ' மாநாட்டை ஏற்பாடு செய்ய, அதற்கு காங்கிரஸ், பல்வேறு வகைகளில், முட்டுக்கட்டை போட்டது. இதானால், தி.மு.க.,வின் கோபம் மேலும் அதிகரித்தது.< இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட விவாகரங்களில் காங்கிரஸ் மாட்டிக்கொண்டதால் தி.மு.க., குஷியானது. கூடங்குளம் அணு மின்நிலையம் விவகாரம், இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, கூட்டணியில் இருந்துக் கொண்டே மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியது.இதன் உட்சகட்டமாக, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, காஸ் கட்டுப்பாடு போன்ற பிரச்னைகளின் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நடந்த, பந்த் போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு அளித்தது. எதிர்ப்பு... எதிர்ப்பு... காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கட்சிகள் கழண்டு ஓடும் நிலையில், கருணாநிதியை, "தாஜா' செய்ய, மத்திய அமைச்சர் நாராயணசாமியை காங்கிரஸ் மேலிடம் அனுப்பியது. இதனை தகுதி குறைவாக நினைத்த தி.மு.க., தலைமை, மேலும் கோபமானது. இதைத் தொடர்ந்து, "மத்திய அரசில், புதிய கேபினட் அமைச்சர், இணை அமைச்சர்கள் பதவிகளை தி.மு.க., பெறாது' என, நேற்று முன்தினம் தெளிவுபடுத்தினார். சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில், "தி.மு.க., மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தேவையில்லை' என பலரும் எதிர்ப்பு தெரிவித்து, வலியுறுத்தி பேசியுள்ளனர். தெளிவு... தெளிவு... செயற்குழு கூட்ட முடிவில், பேட்டியளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, ""அன்னிய நேரடி முதலீட்டினை எதிர்த்து, எதிர்கட்சிகள் பார்லிமென்ட்டிலே தீர்மானம் கொண்டு வந்தால், ஆதரவு அளிப்போம்,'' என மத்திய அரசுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.மேலும், ""மத்தியில் ஒரு பிற்போக்குத்தனமான, மதச்சார்புள்ள ஆட்சி வந்து விடக்கூடாது என்பதால் தான்,பல்வேறு முரண்பாடுகளோடு, மத்திய அரசு செயல்படும் இந்த நிலையிலும், தி.மு.க., தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது, '' என தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் கருணாநிதி.< குஷ்புவுக்கு மரியாதை :தி.மு.க., செயற்குழுவில் முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நீண்ட வரிசையில் நின்று வெளியே காத்திருக்கும் போது, நடிகை குஷ்புவை வரிசையில் நிற்க வைக்காமல், அவரிடம் உடனே கையெழுத்து பெற்று கட்சி பிரமுகர்கள் உள்ளே அனுப்பி வைத்ததை கண்டு, மூத்த தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர்.கூட்டத்தில் பங்கேற்க வந்த செயற்குழு உறுப்பினர்கள் பலர், அரங்கத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த "மினிட் நோட்புக்'கில் கையெழுத்திட, நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர்.அந்த வரிசையில், "மாஜி' சபாநாயகர்மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் என்ற அடிப்படையில், வரிசையில் நிற்க நடிகை குஷ்பு முயன்றார்.
அப்போது, தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் இருவர், குஷ்புவிடம் சென்று, "மேடம் நீங்கள் வரிசையில் நிற்க வேண்டாம்... உள்ளே வந்து கையெழுத்திட்டு செல்லுங்கள்' எனக் கூறி அழைத்துச் சென்றனர்.இதைக் கவனித்த மூத்த கட்சி பிரமுகர்கள், "குஷ்புவுக்கு இருக்கிற மரியாதை, எங்களுக்கு கட்சியில இல்லையே' என, வருத்தப்பட்டு புலம்பினர். பொன்முடி, நேரு ஓடி ஒளிவதால் அவமானம்: >சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில், நடந்த விவாதங்கள் குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: செயற்குழுவில் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பலருக்கு, பேச வாய்ப்பு தரப்பட்டது. இதில், மத்திய அரசு குறித்தும், முக்கிய பிரமுகர்கள் மீதான வழக்குகள் குறித்தும் பேசும்போது, பெரும் பரபரப்பு எழுந்தது.
தென் சென்னை மாவட்டச் செயலர் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:< தி.மு.க.,வினர் மீது, பொய் வழக்கு போடுகின்றனர் என்பது மக்களுக்குத் தெரியும். வீரபாண்டி ஆறுமுகம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஸ்டாலின் மீதும், அவரது மகன் உதயநிதி மீதும், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்ட போது, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, ஸ்டாலின் துணிச்சலாகச் சென்று, "என்னை கைது செய்யுங்கள்' என, கூறினார். இப்படியிருக்கும் போது, பொன்முடி, நேரு போன்றவர்கள், போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருப்பது, கட்சிக்கு அவமானம். எனவே, அவர்கள் இருவரும் மாவட்டச் செயலர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.தவறு செய்த, முன்னாள் அமைச்சர்கள் தான் பயப்பட வேண்டும். பொன்முடி, நேரு தவறு செய்யவில்லை என்றால், ஏன் ஓடி ஒளிய வேண்டும். அவர்கள் வெளியே வந்து, எந்த வழக்கையும் கண்டு பயப்படாமல், அதை தைரியமாகச் சந்திக்க, சரண் அடைய வேண்டும்.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, கட்சியில் பதவி இல்லை. எனவே, அவரை பற்றி பேசத் தேவையில்லை.இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
திருச்சி சிவா எம்.பி., பேசியதாவது:நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டைபெரிதுப்படுத்தாமல், காங்கிரஸ் அமுக்கி விட்டது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் மட்டும், தி.மு.க., மீது, வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கிலிருந்து, சட்டப்பூர்வமாக தி.மு.க., நிரபராதி என, நிரூபித்து விடலாம்.காங்கிரசுடன் இருந்தால், உண்மையை நிலை நாட்ட முடியாது. மக்களுக்கு காங்கிரஸ் மீது இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. எனவே, காங்கிரஸ் கட்சியை தாங்கி பிடித்துக் கொண்டு, இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மலை மீது ஏறும் போது ஏற்படுகிற வேதனையோடு, முதுகில் சுமையும் ஏற்றிச் சென்றால்,இன்னும் வேதனை தான்.அதே போலவே, காங்கிரஸ் கட்சியை, நம் கூட்டணியில் சேர்த்தால், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. எனவே, மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேற வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "தி.மு.க., எதிர்ப்பை சமாளிப்போம்':
"சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை ஆதரிப்போம்' என, தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, பதில் அளித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ""மத்திய அரசு பெரும்பான்மையுடன் உள்ளதால், முடிவுகளை எடுக்கும் எல்லா அதிகாரமும் அதற்கு உள்ளது. எனவே, எந்த தாக்குதலையும் சமாளிப்போம். அணு ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்திலும்,இதேபோல எதிர்ப்புகள் வந்தன; அதை சமாளித்தோம்,'' என்றார் .-நமது நிருபர்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக