ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா சி.பி.ஐ. விசாரணை… THE END!
Viruvirupu,
2ஜி
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்
ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தொடர்பாக இருந்த
சர்ச்சைகளுக்கு சி.பி.ஐ. தரப்பில் முடிவு கூறப்பட்டுள்ளது. சென்னை சிறப்பு
நீதிமன்றத்தில் சி.பி.ஐ., “சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்மே
மரணமடைந்தார்” என்று தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி, சாதிக் பாட்சா தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கு போட்ட நிலையில் இறந்து காணப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கடந்த 17 மாதங்களாக நடத்திய விசாரணையின் முடிவில் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.
“சாதிக் பாட்சா கடைசியாக எழுதிய தற்கொ
லை கடிதத்தில் இருப்பது அவரின் கையெழுத்துதான் என்று தடய அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்” எனவும், சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான 38 வயதான சாதிக் பாட்சா, கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். 2-ஜி ஊழல் வழக்கு வெளிச்சத்திற்கு வந்தபோது, பாட்சாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்க பிரிவினரும் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர். அவரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனைகளும் நடைபெற்றன.
அதன்பின் அவர் இறந்த காரணத்தால், அவரது மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக