Viruvirup
கிரானைட்
மோசடி வழக்கில் போலீஸூக்கு டிமிக்கி (!) கொடுத்துவிட்டு தலைமறைவாக
உள்ளவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்
வெளியாகி, மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் சிக்கியுள்ள பி.ஆர்.பழனிச்சாமி, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 12 பேருக்குச் சொந்தமான ரூ. 20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ள விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக, மற்றொரு தகவல்.
பி.ஆர்.பி கிரானைட்ஸ் நிறுவன அதிபர் பழனிச்சாமிமீது மட்டும் இதுவரை 24 வழக்குகளைப் போலீஸார் போட்டுள்ளனர். அவர் சரணடைந்து, போலீஸ் காவலில் உள்ளார். இதனால் அவர், தலைமறைவு பட்டியலில் இல்லை. ஆனால், அவருடைய மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் இருவரும், தலைமறைவாக உள்ளனர். மறுபுறத்தில், துரை தயாநிதி கைதாகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் டேப்படும் குற்றவாளிகளில், மொத்தம் 40 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை மதுரை போலீஸால் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. கொஞ்சம் துருவி விசாரித்துப் பார்த்தால், மதுரை போலீஸ் கிரைம் பிராஞ்சில் உள்ளவர்களுக்கே நம்பிக்கை இல்லை.
நாம் விசாரித்தவரை, மதுரை கியூ பிராஞ்ச் மனது வைத்தால் பிடிக்க முடியும் என்று தெரிகிறது. ஆனால், கியூ பிராஞ்சின் உதவியை நாடுவதை, மதுரை கிரைம் பிராஞ்ச் அவமானமாக கருதுகிறது. இதில் ஈகோ பிரச்னை உள்ளது.
இதையடுத்தே, தலைமறைவாக உள்ளவர்களின் சொத்துக்கள் முடக்கம் என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளது, மதுரை காவல்துறை.
ஆனால், அதைக் கேட்டவுடன் பாய்ந்து ஓடிவரவேண்டிய அவசியம், தலைமறைவானவர்களுக்கு கிடையாது. காரணம், சொத்துக்களை இவர்களால் கையகப்படுத்த சட்டத்தில் இடமில்லை. அதாவது அவற்றை சீஸ் பண்ண முடியாது. முடக்கி வைக்கலாம் அவ்வளவுதான். அதற்குகூட நீதிமன்ற உத்தரவு தேவை.
முடக்கப்பட்ட சொத்துக்களை, (ஒருவேளை முடிக்க முடிந்தால்) நாளைக்கே ஒரு துடிப்பான வக்கீல் சுலபமாக ரிலீஸ் பண்ணி கொடுத்துவிடுவார். (வங்கிக் கணக்கு முடக்கல் வேறு, சொத்து முடக்கல் வேறு)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக