செவ்வாய், 2 அக்டோபர், 2012

மம்தா மூன்றாம் அணி உருவாக்குகிறார் விளங்கிடும்

அடுத்த பொதுத் தேர்தலுக்குள், மாநில கட்சிகளை உள்ளடக்கிய, புதிய கூட்டணியை உருவாக்க தீர்மானித்துள்ளேன். அத்துடன், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவேன்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, சமீபத்தில் வெளியேறிய, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி, டில்லியில் நேற்று, மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.(தனது பொறுப்பற்ற தான்தோன்றி வாய்ச்சவடலால் ஒரு காலத்தில் தீதி என்று அன்பாக கொண்டாடப்பட்ட மம்தா இன்று ஒரு ஜெயா மாயா வரிசையில் வந்து விட்டார். இந்த மூவரும் பேசாமல் இருந்தாலே நிச்சயம் நல்ல ஒரு வெற்றி கூட்டணி உருவாகும் . இந்த மூவரும் மீண்டும் காங்கிரசுக்கு பெரிய வாய்ப்பை இப்போதே உருவாக்க தொடங்கி விட்டார்கள் . இவர்களின் வாய் அப்படி)
இந்த ஆர்ப்பாட்டத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:ஐ.மு., கூட்டணி அரசு, மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. இதைக் கண்டித்து, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய அரசு மீது, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, திரிணமுல் காங்கிரஸ் கோரும். அத்துடன், நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வர, முடிவு செய்துள்ளோம்.


பயப்பட வேண்டாம்:

சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை கொண்டு வருவது அநீதியானது; இதை எதிர்த்து, கொண்டு வரும் தீர்மானத்தின் மீது, தங்களது நிலைப்பாட்டை கட்சிகள் தெரிவிக்கட்டும். திரிணமுல் காங்கிரஸ் கொண்டு வரும் தீர்மானத்தை, அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். அரசுக்கு ஆதரவு தரும், கூட்டணி கட்சிகளும் ஆதரிக்கலாம்; பயப்படத் தேவையில்லை.மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.ஐ.,) போன்ற பூச்சாண்டிகளுக்கு, யாரும் பயப்பட வேண்டாம். காரணம், தற்போதைய மத்திய அரசு போகப் போகிறது. கவிழப் போகும் அரசு, சொல்லும் பேச்சை எந்த அதிகாரிகளும் கேட்க மாட்டார்கள். எனவே, திரிணமுல் காங்கிரசின் தீர்மானத்தை தைரியமாக ஆதரித்து, கட்சிகள் ஓட்டு போடலாம்.எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, விரைவில் பொதுத் தேர்தல் வரப் போகிறது. வரும், மார்ச் மாதத்தில், மக்களை கவரும் வகையிலான, ஒரு ஜனரஞ்சகமான பட்ஜெட்டை போட்டு விட்டு, நேரடியாக பொதுத் தேர்தலுக்கு போக, காங்கிரஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், தேர்தலில், ஐ.மு., கூட்டணியை தூக்கி எறிய, மக்கள் தயாராகி விட்டனர்.


துரோகம் செய்தது:
"கடந்த, 2004ல் நடந்த பொதுத் தேர்தலின் போது, சாமானிய மக்களுக்கு ஆதரவாக ஆட்சி புரிவோம்' என, கூறியே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.ஆனால், தங்களை ஆட்சியில் ஏற்றிய, அதே சாமானிய மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. தங்களை வஞ்சகமாக ஏமாற்றிய காங்கிரசை வீழ்த்த, மக்களும் தயாராகிவிட்டனர். இனி ஒரு போதும், மக்களை ஏமாற்ற யாராலும் முடியாது.

இன்றைய ஆர்ப்பாட்டத்துடன் நிற்க மாட்டோம். நவம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில், இதே போல், டில்லியில் இரண்டு நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அதற்கு முன், நவம்பர் 17ம் தேதி, லக்னோவில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தப் பேரணியில் முலாயம் சிங், அகிலேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்பர்.பீகார் தலைநகர் பாட்னாவிலும் பேரணி நடத்தப்படும். இது குறித்து, அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாருடன் பேசிய பின், தேதி முடிவு செய்யப்படும்.அரியானாõவில், நவம்பர் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம், தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் முடிந்த பிறகே நடத்தப்படும். பொது மக்களுக்கு, எந்த விதத்திலும் சிரமம் தரமாட்டோம்.


விரைவில் முடிவு :
ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது என, தீர்மானித்து விட்டேன். மாநில கட்சிகளை உள்ளடக்கிய, அந்தக் கூட்டணி குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும். டில்லியில் அமர்ந்து, நாட்டையே கட்டி ஆளும் காலம் மலையேறப் போகிறது.60 ஆண்டுகளாக இருக்கும் வழக்கம், முடிவுக்கு வரும். மாநிலங்களுக்கு உரிய மதிப்பு அளிப்பதோடு, அவற்றை அங்கீகரிக்கும் மத்திய அரசு, டில்லியில் அமைய வேண்டும்.ஐ.மு., கூட்டணிக்கு, ஏதோ மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பது போல, காட்டிக் கொள்கின்றனர். பெரும்பான்மை பலத்திற்காக, ஏதேதோ செய்து சமாளிக்கின்றனர். இதற்காக சி.பி.ஐ., உட்பட, சில அமைப்புகள் மூலம் மிரட்டுகின்றனர்.மத்திய அரசுக்கு, நான் பகிரங்க சவால் விடுக்கிறேன். சி.பி.ஐ.,யை பயன்படுத்தி, என் மீதோ, என் கட்சியினர் மீதோ, ஏதாவது வழக்கு போட்டுப் பாருங்கள். தைரியம் இருந்தால், அதைச் செய்யுங்கள். ஜனநாயகத்தில் ஆர்ப்பாட்டம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால், எதிர்ப்பவர்களை எல்லாம், சிறையில் தள்ள நினைப்பது தவறு. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.


"நன்றி சொல்லுங்க':
ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்கு முன், மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த, திரிணமுல் காங்கிரஸ் அமைச்சர்களை, கூட்டத்தினர் மத்தியில், மம்தா அறிமுகப்படுத்தினார். "அரசின் தவறான முடிவுகளை எதிர்த்து, மக்களுக்கு ஆதரவாக, தங்களின் பதவிகளை ராஜினாமா செய்த இவர்களுக்கு, நாம் நன்றி சொல்ல வேண்டும்' என கூறி, பேச ஆரம்பித்தார்.சமூக சேவகர் அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக, டில்லியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அதே போன்ற பிரமாண்ட கூட்டம், நேற்றும் ஜந்தர் மந்தரில் காணப்பட்டது. பஞ்சாப், அரியானா மற்றும் உ.பி., மாநிலங்களில் இருந்து, வந்திருந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


சரத் யாதவ் கோபம்:
மம்தாவின் ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர், சரத் யாதவும் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, ""1,500 ஆண்டுகளாக இருந்து வரும் உள்ளூர் வர்த்தகத்தை, நேரடி அன்னிய முதலீடு என்ற, ஒரே ஒரு முடிவின் மூலம் மாற்றி, 25 கோடி மக்களின் வயிற்றில் அடித்துள்ளார், பிரதமர் மன்மோகன் சிங். இது மிகப்பெரிய அநீதி,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: