ஜெ. கல்தா கொடுத்த சண்முகம்: சில மணி நேரத்தில் மர்மமாக என்ன நடந்தது?
இன்றைய
அமைச்சரவை பந்தாட்டத்தில் வெளியே வீசப்பட்ட சி.வி.சண்முகத்துக்கு, இன்று
காலை தமது அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ஒரு சான்ஸ் இருந்தது
என்கிறார்கள், அ.தி.மு.க. வட்டாரங்களில். இன்று காலை விழுப்புரம் வடக்கு
மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து மட்டுமே சி.வி.சண்முகத்தை
நீக்கியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.
“தலைக்கு வந்தது, தலைப்பாகையுடன் போனது” என்று சி.வி.சண்முகம், ஓரளவுக்கு மகிழ்ச்சியுடன்தான் இருந்தார் என்கிறார்கள், அ.தி.மு.க. புள்ளிகள்.
ஆனால், இன்று பிற்பகல் சி.வி.சண்முகத்தை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.
காலையில் சண்முகத்தை தூக்கிவிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக டாக்டர் ஆர்.லட்சுமணனை ஜெயலலிதா நியமித்தபோது, கட்சிப்பதவியை மட்டும் பறிப்பது என்ற முடிவில் மட்டும் இருந்தார் என்கிறார்கள். ஆனால், அதன்பின் ‘ஏதோ’ நடைபெற்றதில், பிற்பகலில் சட்டம் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் சி.வி. சண்முகத்தை நீக்குவதாக முதல்வர் அறிவித்தார்.
காலைக்கும், பிற்பகலுக்கும் இடையே மர்மமாக என்ன நடந்தது என்பதே, அ.தி.மு.க.-வில் இன்றைய ஹாட் டாபிக்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக