புதன், 3 அக்டோபர், 2012

6 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு : 6 பேர் கைது


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட தோப்புவளசை கிராமத்தில் ஒரு ஓரமாக ஒரு ஏக்கர் நிலத்தில் குடியிருந்து வருபவர் காளிமுத்து (30). இவரது கணவர் கள்ளழகர் அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.
இதன்மூலம் அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு தங்களது பிள்ளைகளான மகள் காளீஸ்வரி (12), மகன் பாலா (7), மகள் சரண்யா (5), சக்தி (ஒன்றரை வயது) ஆகியரோடும், தனது தந்தை கருப்பையாவோடும் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தைக்கொண்டு குடும்பத்தை நடத்தினாலும், இவர்கள் பாய் மற்றும் கிடுகு முடையும் தொழிலையும் செய்து வந்தனர்.
இதனிடையே 30.09.2012 அன்று இரவு இவரது வீடு தீ பற்றி எரிந்தது. சுற்றிலும் காரைச்சுவர், உயரே கூரை வேய்ந்திருந்த அந்த வீடு தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. வெளியே வரமுடியாமல் தவித்த காளிமுத்து, அவரது தந்தை, தனது பிள்ளைகள் 4 பேர் உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே கருதி இறந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது வீட்டின் கதவில் முன்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததாக கூறப் படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவ வழக்கு தொடர்பாக இன்று ராமநாதபுரத்தில் முனியாண்டி, மங்களநாதன், லூயிஸ்ராஞ், பஞ்சாட்சரம், சுஜாகனி, காளிமுத்தன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படங்கள் : பாலாஜி

கருத்துகள் இல்லை: