காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் செலவுக்காக
மத்திய அரசு எந்த செலவும் செய்யவில்லை என்று தேசிய தகவல் ஆணையம்
கூறியுள்ளது. இதன்மூலம் இந்த விஷயத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோர் சொல்லி வரும் புகார்கள்
தவறானவை என்பது உறுதியாகியுள்ளது.
சோனியா காந்தியின் வெளிநாட்டுப்
பயணங்கள், தங்கும் செலவு, மருத்துவ செலவுக்காக மத்திய அரசு ரூ. 1,880 கோடி
செலவிட்டுள்ளதாக முதலில் சாமியும் பின்னர் மோடியும் குற்றம் சாட்டி
வருகின்றனர்.இந் நிலையில் இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நவீன் குமார் என்பவர் மனு செய்தார். இதற்கு பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை மற்றும் மத்திய அரசின் பிற துறைகளிடம் இருந்து விவரம் பெற்று உடனடியாக பதில் தந்துள்ளது தகவல் ஆணையம்.
அதில், சோனியா காந்தியின் மருத்துவச் செலவுக்காக மத்திய அரசின் எந்தத் துறையும் எந்த செலவையும் செய்யவில்லை. இதுவரை அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த செலவும் ஏற்படவில்லை.
அதே நேரத்தில் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ சிகிச்சைக்காக சோனியா செலவிட்ட தொகை என்பது அவரது தனிப்பட்ட விஷயம். எந்த தனிப்பட்ட நபரின் சொந்த செலவு குறித்தும் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க முடியாது என்று கூறியுள்ளது ஆணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக