தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்க இலங்கை
ஜனாதிபதி ராஜபக்ஷ மத்திய பிரதேச பாரதீய ஜனதா அரசின் அழைப்பை ஏற்று, ஒரு
தனிப்பட்டபயணமாக இந்தியா வந்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பேசக்
கூடாது என்றும், அவர் இந்தியா வரக்கூடாது என்றும் சிலர் குரல்
கொடுக்கிறார்கள். இலங்கையில் வாழ்கிற தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்
தரவும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாம் இலங்கை
ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பேசாமல், யாரோடு பேசுவது? ராஜபக்ஷ இந்தியா
வரக்கூடாது என்றால், பிரதமரோ, வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவோ
இலங்கை செல்ல முடியுமா? இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ வருகையையொட்டி தமிழகத்தில்
அரசியல் நடத்த வேண்டும் என்று எண்ணுகிற அமைப்புகள் இலங்கை தமிழர்களின்
நலனை எண்ணி, மீனவர்களின் நலனை எண்ணி அமைதி காக்க வேண்டும் என்று அன்போடு
கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக