போலி போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தயார்-பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!
போலி போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தயார் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலி போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உலகின் எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்க அஞ்சப் போவதில்லை.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மேஜர் ஜெனரல் சாவேந்திரா சில்வா, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஆகியோருக்கு எதிராக புலிகளின் கிழக்குத் தளபதி ரமேஸின் மனைவி வத்சலாதேவி சுமத்தியுள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மையான தரவுகளை சர்வதேச நீதிமன்றங்களில் வெளிப்படுத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வத்சலாதேவி தென் ஆபிரிக்காவில் இல்லை எனவும் அவர் லண்டனில் இருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சகல வழக்குகளின் பின்னணியிலும் ருத்ரகுமாரன் செயற்பட்டு வருகின்றார்.
புலிகளுக்கு சொந்தமான பாரியளவிலான நிதி சுவிட்சர்லாந்து வங்கிகளில் காணப்படுவதாகவும் இவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் எனவும் முரளிதரன் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக