தெலுங்கில் கடந்த வாரம் திரைக்கு வந்து வசூலில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் ‘பிருந்தாவனம்’.
ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாகவும், காஜல் அகர்வால், சமந்தா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ், ஸ்ரீ ஹரி என மிரட்டலான நடிகர்கள் பட்டாளம் நடிக்கும் இந்தப் படத்தின் இயக்கம் வம்சி. இயக்குனர் ‘வம்சி’ என்றாலே தெலுங்கு திரையுலகில் ஹிட்தான். அந்தப் பேருக்கு மேலும் வாசம் சேர்த்துள்ளது பிருந்தாவனம்.
இப்போது ஏன் இந்த தெலுங்குப் பட டீட்டைல்...? எல்லாம் விஜய்யின் அடுத்த பட விவகாரமாகதான்.
எப்போதுமே தெலுங்கில் ஹிட்டடிக்கும் படம் அப்படியே தமிழில் பிட்டடிக்கப்படுவது (ரீமேக் செய்வது) வழக்கம். இந்த வழக்கம் இங்கிருந்து தெலுங்கிலும் நடக்கும் காலங்காலமான பழக்கம்தான்.
தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்குக்கு பிரசித்தி பெற்றவர்கள் விஜய், தனுஷ், ஜெயம் ரவி தரப்பினர். ஜெயம்ரவி - ஒண்ணு ரெண்டு படம் போக டோட்டலாகவே ரீமேக் ஃபார்முலாதான். தனுஷுக்கும் யாரடி நீ மோகினி, குட்டி, அடுத்து வெளியாகவிருக்கும் உத்தம புத்திரன் என பெரிய பட்டியல் போடலாம்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்... பிருந்தாவனம் பெற்று வரும் வெற்றியை கேள்விப்பட்ட விஜய், அதன் ஒரு படப்பெட்டியை வரவழைத்து போர் பிரேம்ஸ் திரையரங்கில் போட்டு பார்த்தாராம். தனது குடும்பத்தினர், நண்பர்களில் முக்கியமானவர்கள் என தனது நெருங்கிய வட்டாரங்களுடன் பிருந்தாவன தரிசனம் நடத்தியிருக்கிறார் விஜய்.
படம் பார்த்து முடித்தபின் விஜய்க்கு அப்படி ஒரு சந்தோஷமாம். படத்தைப் பற்றி தனது திரைவட்டார நண்பர்களிடம் ரொம்ப பெருமையாக பேசினாராம். பிடிச்சுருந்தா ரீமேக் பண்ணிட வேண்டியதுதானே என நண்பர்கள் கேட்டதற்கு மௌனப்புன்னகை மட்டும் புரிந்தாராம் விஜய். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. விஜய்யின் மௌனப் புன்னகை...? வேறென்ன ரீமேக்கின் அறிகுறிதான். அப்படி என்றால்... விரைவில் விஜய்யின் பட வரிசையில் பிருந்தாவனமும் இடபெற்ற தகவல் வெளியாகலாம்.
ரெடி ஸ்டார்ட்... பிருந்தாவனம் ரீமேக் கவுண்டவுன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக