வியாழன், 28 அக்டோபர், 2010

சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள்



இலங்கையிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்துக்கொண்டு சென்ற ஒன்றரைக் கோடி (இந்திய ரூபா) பெறுமதியான  2 ஆயிரத்து 65 நவரத்தினக் கற்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்து வைத்து நவரத்தின கற்களை கடத்தி வருவதாக புறநகர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
கடத்தல் ஆசாமியை பிடிப்பதற்காக பொலிஸாரின் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படைகள் தீவிரமாக கண்காணித்தபோது விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த முகமது ஷபி (41)  என்பவரை பிடித்தனர்.
இலங்கையை சேர்ந்த இவர்தான் நவரத்தின கற்களை கடத்தி வந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஷபியை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பொலிஸார் அவரது வயிற்றை ஸ்கான் செய்து பார்த்தனர். வயிற்றுக்குள் 48 நிரோத் பாக்கெட்டுகளில் 2 ஆயிரத்து 65 நவரத்தின கற்கள் இருந்தன.
இதனை வெளியில் கொண்டுவர பொலிஸார் முயற்சி மேற்கொண்டனர். இனிமா, வாழைப்பழம் போன்றவை அவருக்கு கொடுக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரம் காத்திருந்த பின்னர் வயிற்றில் இருந்த ரூ.1 1/2 கோடி மதிப்பிலான நவரத்தின கற்கள் வெளியில் வந்தன.

கருத்துகள் இல்லை: