சனி, 30 அக்டோபர், 2010

யாழ். ஆதார வைத்தியசாலைகளுக்கு சத்திரசிகிச்சை படுக்கைகள் கையளிப்பு

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்காவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்திலுள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளுக்கு அவசர சத்திரசிகிச்சைப் படுக்கைகளும் மற்றும் நோயாளர்களின் படுக்கைகளும் யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள படைகளின் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை படுக்கையும் இன்று வழங்கப்பட்டன.அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இயங்கும் லக்சலிய அறக்கட்டளை நிறுவனம் இப்பொருட்களை வழங்கியிருந்தது. யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கா, இந்தப் படுக்கைகளை தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைப் பணிப்பாளர்களிடம் கையளித்தார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி அதிபர், பயிற்சித் தாதியர்கள் உட்பட மற்றும் பலரும் படைத் தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: