வியாழன், 28 அக்டோபர், 2010

மீண்டும் அகதிகள் தமிழகம் வருகை : கியூ பிரிவு போலீசார் விசாரணை!

(சாகரன்)
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால், இலங்கை நிலவரம் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் நடந்தபோது, அங்கிருந்து ஏராளமான அகதிகள் படகு மூலம் ராமேஸ்வரம் வந்து, போலீஸ் விசாரணைக்குப் பின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். போர் முடிவுக்குப் பின் அகதிகள் வருகையும் முற்றிலும் குறைந்தது. தமிழக முகாம்களில் தங்கிய அகதிகள் பலர , அரசின் அனுமதி பெற்று, இலங்கை திரும்பினர். ஏராளமானோர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனிடையே இலங்கை மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள், விமானம் மூலம் தமிழகத்திற்கு வரத்துவங்கி உள்ளனர். இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பெண் அகதி, சவுதியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, உரிய அனுமதியுடன் மண்டபம் முகாம் வந்துள்ளார். இவரைப் போல் இலங்கை மட்டகளப்பைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும், இலங்கையிலிருந்து விமானம் மூலம் அகதியாக தமிழகம் வந்துள்ளார்.

அவர்கள் கூறியதாவத : இலங்கையில் உள்ள நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை. ராணுவத்திற்கு,புலிகள் குறித்த சந்தேகம் உள்ளதால், இன்னும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. மேலும், தமிழகத்தில் உள்ள வசதிகள் போல் அங்கு இன்னும் சரியாக கிடைக்காததால், தமிழகத்தில் இருக்கவே விரும்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மண்டபம்
வந்த அகதிகளிடம் கியூ பிரிவு போலீசாரும், இலங்கை நிலவரங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆனால் விடயம் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் இலங்கை இராணுவத்தினால் முள்ளக்கம்பிக்கு பினால் அடைக்கப்பட்ட அல்லது சரணடைந்த தீவிர புலி உறுப்பினர்கள் இலஞ்சம் கொடுத்து முகாமிலிருந்து தப்பி வெளியே கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் இவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் சிறப்பாக பொது மக்களிடம் இருந்து ஏற்பட்டிருப்பதால் தமிழ் நாட்டிற்கு தப்பி வருவதாக அறிய முடிகின்றது. இவர்கள் முகாங்களிலிருந்து பணம் கொடுத்து தப்பி வந்ததை இராணுவத்திக்கு அறிவிப்பதில் இவர்களால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தீவிரமாக இருந்ததாகவும் அறிய முடிகின்றது.
மேற்கத்தைய நாடுகளுக்க தப்பிச் செல்வதற்கான இடைத்தங்கல் சரணாலயமாக தமிழகத்தை அல்லது நிரந்தரமாக தங்கிவிடும் இடமாக தமிழகத்தை முன்னாள் புலி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.
இதன் ஒரு வடிவமாகத்தான் புலிகளின் முக்கிய உறுப்பினர் மு. திருநாவுக்கரசு (இவர் தீவிர இந்திய எதிர்பாளர் கூட) மண்டபம் முகாமிற்கு தப்பி வந்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும், இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு உசார் அடைந்த போது இவர் தமிழ் நாட்டிற்குள்ளேயே புலிகளுக்காக வேலை செய்யும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் உதவியுடன் இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழுவதாகவும் அறிய முடிகின்றது. இந்திய அகதிகள் முகாங்களில் வசதிகள் அதிகம் என்பது எல்லாம் அங்கு வாழ்ந்து பார்த்தவர்களுக்கு தெரியும் எவ்வளவு 'உண்மை' என்று. எனவே தமிழ் நாட்டிற்கான 'அகதிகள்' வருகை இன்னும் தொடரும்.
விமானத்தில் இலங்கையிலிருந்து இந்தியா வருபவர்கள் வசதி படைத்த அகதிகளே என்பதையும் கவனிக்க வேண்டும். புலம் பெயர் நாடுகளில் உள்ள உறவினர்களின் டாலர்களில் வாழும் 'ஏழை'களாக இருக்க வேண்டும். உண்மையான அகதிகள் இன்றும் தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் வசதிகள் வாய்ப்புபகள் இன்றி இரண்டில் இருந்து இருபத்தி ஐந்து வருடங்களாக வாடி வதங்குகின்றனர். இவர்கள் வாழ்வு மறுக்கப்பட்டவர்கள். மாறாக வசதியான வாழ்வில் சிலவற்றை இழந்தவர்கள் அல்ல.
(செய்திகளின் அடிப்படையில் ஆக்கம்: சாகரன்)

கருத்துகள் இல்லை: