வியாழன், 28 அக்டோபர், 2010

வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதோர் இந்திய வியாபாரிகள் 20 பேரை அழைத்துச் சென்றதால் பரபரப்பு


யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்து நீண்டகாலமாக இந்திய வியாபாரிகள் யாழ். மாவட்டத்தில் புடைவை வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதரும் இவ் வியாபாரிகள் வியாபார அனுமதியின்றி உடுபுடைவை வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது. அத்துடன் ஏனைய மாவட்டங் களில் இவர்களு க்கு எதிராக சட்ட நடவடிக்கைகளு ம் மேற் கொள்ளப்பட்டன.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30மணிக்கு வெள்ளை வானில் சிவில் உடையில் வந்த குழுவினர் யாழ்.நகர் விடுதிகளில் தங்கியிருந்த 20 இற்கும் மேற்பட்ட  இந்திய வியா பாரிகளின் கடவுச் சீட்டுகளை பறிமு தல் செய்ததுடன் அவர்களையும் அழைத்துச் சென் றுள்ளனர்.
எனினும் இவ் வாறு அழைத்துச் செல்லப்பட்ட இந் திய வியாபாரிகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவில்லை என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை சுற்றுலா விசாவில் வந்து   அனுமதியின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை புலனாய்வுப் பிரிவினரே விசாரணைக்காக மேற்படி இந் திய வியாபாரிகளை அழைத்துச் சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: