
மக்கள் மத்தியில் உள நலம் தொடர்பான சிக்கல்களை இனங்கண்டு அவர்கள் மூலமாகவே தீர்வுக்குட்படுத்துவது, உள நலம் தொடர்பான பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல நோக்கங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினரின் அனுசரணையில் மக்கள் மத்தியில் உளநலம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான கையாள்கைகள் குறித்த வீதி நாடகங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன.(பட இணைப்பு) இந்த வீதி நாடகங்கள் இன்று மட்டக்களப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தினரால் காலை 10 மணிமுதல் நடைபெற்றது. தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னால் நடத்தப்பட்டு பின்னர் செங்கலடி நகரில் நடத்தப்பட்டது. நாளை இந்த வீதி நாடகங்கள் வாகனேரியில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக