வெள்ளி, 29 அக்டோபர், 2010

Obama மும்பையில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.

இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா, நவம்பர் 8ம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் எம்பிக்களிடையே உரையாற்றுகிறார்.

ஒபாமா, தனது மனைவி மிசெலுடன் வரும் நவம்பர் 6ம் தேதி மாலை மும்பை வருகிறார். தாஜ் ஹோட்டலில் தங்கும் அவர் 7ம் தேதி காலை மும்பையில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.

மேலும் மும்பையில் சில நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களால் இந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை. அவர் செல்லும் பள்ளியின் விவரமும் அறிவிக்கப்படவில்லை.

7ம் தேதி இரவு ஒபாமா மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

8ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். அப்போது பொருளாதார ஒத்துழைப்பு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

மாலை 5 மணிக்கு, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் எம்.பி.க்களின் கூட்டு கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார்.சுமார் 30 நிமிடங்கள் பேசவுள்ளார்.

ஒபாமாவின் வருகையையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. சிஐஏ அதிகாரிகளும் இந்த ஏற்பாடுகளை பார்வையிட உள்ளனர்.

ஒபாமா உரை நிகழ்த்தும் மைய மண்டபத்தை புதுப்பிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதன் பிறகு இப்போது ஒபாமா உரையாற்ற உள்ளார்.

ஒபாமா வருகையின் போது, இந்தியா-அமெரிக்கா இடையே பல முக்கிய பாதுகாப்பு, பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
  Read:  In English 
9ம் தேதி அவர் மனைவியுடன் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றி பார்க்கிறார். அன்றே டெல்லி திரும்பும் அவர் இரவே அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குச் செல்லவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், பொற்கோவிலுக்குள் வர சீக்கிய மத முறைப்படி தலையில் துணி அணிய வேண்டும் என்று கூறப்பட்டது. இதை ஒபாமா ஏற்கவில்லை. இதையடுத்து தனது அமிர்தசரஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: