சனி, 30 அக்டோபர், 2010

விஜயகலா மகேஷ்வரன் அரசாங்கத்துடன் இணையப் போகின்றார்



ஐ.தே.க.வின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஷ்வரன் மிக விரைவில் அரசாங்கத் தரப்புடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன.
திருமதி விஜயகலா மகேஷ்வரன் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்து சமய கலாசார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தியாகராசா மகேஷ்வரனின் மனைவியாவார்.
ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாணத்துடன் அரசாங்கத்தரப்பில் இணைந்து கொள்ளவுள்ள விஜயகலா மகேஷ்வரனுக்கு அதற்கடுத்து வரும் சில நாட்களுக்குள்ளாக பிரதியமைச்சுப் பதவியொன்றுடன் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பொறுப்பும் உத்தியோகப் பற்றற்ற ரீதியில் வழங்கப்படும் என்று தெரிகின்றது.
இவ்வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகலா மகேஷ்வரன், தனது கன்னியுரையில் திரு. மகேஷ்வரனின் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுவதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது கணவனின் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத நிலையிலேயே அவர் அரசாங்கத்துடன் இணைந்து பிரதியமைச்சர் பதவியொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

கருத்துகள் இல்லை: