வியாழன், 28 அக்டோபர், 2010

மதுபாட்டிலை கையில் வைத்திருப்பது,பால்தாக்கரே வீட்டில்

இரவு 8.30 மணிக்கு பிறகு பால்தாக்கரே வீட்டில்
நடப்பது என்ன? ராஜ்தாக்கரே

மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து விலகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

சிவசேனா தலைவர் பால்தாக்கரே பலமுறை தாக்கி பேசி இருந்தாலும், ராஜ்தாக்கரே இதுவரை அவரை எதிர்த்து ஒருவார்த்தை கூட கூறியது கிடையாது. ஆனால், இப்போது முதல் தடவையாக பால்தாக்கரே மீது தாக்குதல் தொடுத்துள்ளார் ராஜ்தாக்கரே.
’’பால்தாக்கரே பாணியை நான் காப்பி அடிப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது தவறு. பால்தாக்கரே இவ்வளவு காலமும் என்ன சொல்லி வந்திருக்கிறாரோ அவை எல்லாம் ஏற்கனவே என் பாட்டனார் பிரபோதன்கர் தாக்கரே, ஆச்சார்யா அத்ரே ஆகியோரால் சொல்லப்பட்டவைதான். எனவே, இந்த பெரியவர்களை நான் காப்பி அடிப்பதாக கூற முடியாது.
சிவசேனா செயல் தலைவராக உத்தவ் தாக்கரேயை நான்தான் நியமித்ததாக பால்தாக்கரே கூறியுள்ளார். நான் சிவசேனாவில் இருந்தபோது ஒரு கிளை தலைவரை நியமிக்கும் அதிகாரம் கூட எனக்கு கிடையாது. பால்தாக்கரேயின் அனுமதி இல்லாமல் சிவசேனாவில் எதுவுமே நடக்காது என்பதுதான் உண்மை. 
உத்தவ் தாக்கரேயை நான்தான் நியமித்தேன் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட நான் எடுத்த முடிவு தவறானதா? சரியான முடிவு என்றால் பிறகு ஏன் என்னை தாக்குகிறீர்கள்?

தவறான முடிவு என்றால் உத்தவ் தாக்கரே ஏன் இன்னும் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்? தமது மகன் கட்சித் தலைவர் ஆக வேண்டும் என்பதுதான் பால்தாக்கரேயின் விருப்பம். இதில் நான் எங்கே குறுக்கே வந்து விடுவேனோ என்று அவர் கவலைப்பட்டார்.
என் மீது தாக்குதல் தொடுப்பதையும், பழைய விஷயங்களை தோண்டுவதையும் விடுத்து, மக்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள்? ஏன் சிவசேனாவை புறக்கணிக்கிறார்கள்? என்பது பற்றி பால்தாக்கரே யோசிக்க வேண்டும்.

இரவு 8.30 மணியாகி விட்டால் அங்கு என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். (மதுபாட்டிலை கையில் வைத்திருப்பது போலவும், தள்ளாடுவது போலவும் செய்கை) நாங்கள் மராத்தி மக்களுக்காக போராடி வருகிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: