சனி, 30 அக்டோபர், 2010

நெருக்கடி-குளறுபடி:விருதுநகரில் ராமதாஸ் பேட்டி




விருதுநகர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக  ராமதாஸ் இன்று காலை ராஜபாளையம் வந்தார்.

அங்கே அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது அவர்,   ‘’சட்டமன்ற தேர்தலுக்கு எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி வருகின்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
தென்மாவட்டங்களில் பாமக போதிய வளர்ச்சி பெறவில்லை என்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. எனவே அதனை கருத்தில் கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,  ‘’தமிழகத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக நதிநீர் பிரச்சனை நீடித்து வருகிறது. தற்போது வரை அது தீர்க்கப்படவில்லை.

32 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. 10 பிரதமர்கள், தமிழகத்தில் 5 முதல்வர்கள், கர்நாடகத்தில் 11 முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

கடந்த 1991-ம் ஆண்டு காவிரி பிரச்சனையில் இடைக்கால தீர்ப்பும், 2008-ம் ஆண்டு இறுதி தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனாலும் சுமூகமான நிலை தற்போது வரை கிடைக்கவில்லை.
தமிழக அரசு இதுவரை ரூ.1218 கோடி செலவு செய்துள்ளது.

இதில் வக்கீல்களின் கட்டணமாக மட்டும் ரூ.1142 கோடி வழங்கப்பட்டுள்ளது. நதிநீர் பிரச்சனையால் தமிழகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளில் நிலவி வரும் கட்டண குளறுபடியை சரி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

 

கருத்துகள் இல்லை: