இலங்கையில் நிலவும் அமையான சூழலை அடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய இணையத்தலம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா. வின் புள்ளிவிபரவியல் அறிக்கையில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்ற 67 பொதுமக்கள் ஐ.நாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் நாடு திடும்பியுள்ளனர்.
இந்தியாவிலுள்ள 112 முகாம்களில் 71,654 இலங்கை அகதிகளும் வெளியிடங்களில் 32,467 இலங்கை அகதிகளும் தங்கியுள்ளதாக கடந்த ஜூலை மாதம் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக