அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் சிறைத்தண்டனை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டுமென பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் வெள்ளைத் தேசிய உடைக்கு பதிலாக தற்போது கறுப்புநிற ஆடைகளை அணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. மக்கள் பாண் நுகரக்கூடாது என எவரும் பலவந்தப்படுத்தக் கூடாது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவை உட்கொள்ளும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இலங்கை மக்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்ட தற்போது போன்ற யுகத்தை இதற்கு முன்னர் ஒருபோதும் இருக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக