லண்டன், அக்.9: உலகிலேயே மிகப்பெரிய குடிசையான தாராவியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை குறித்து பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
தாராவி மக்களின் வாழ்க்கை முறை தன்னை வெகுவாக கவர்ந்துவிட்டதாகவும், அவர்களிடம் இருந்து பிரிட்டன் நகரங்களில் வசிக்கும் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சார்லஸ் எழுதியுள்ள "ஹார்மோனி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தாராவி குடிசை பகுதியை சென்று பார்வையிட்ட போது அங்கு வசிக்கும் மக்களின் செயல்பாடுகளை அறிந்து ஆச்சர்யப்பட்டேன். அவர்கள் வாழ்க்கை முறையை நேர்த்தியாக அமைத்துக்கொண்டுள்ளனர். எல்லாவற்றிலும் ஒழுங்கை கடைப்பிடிக்கின்றனர். பிரிட்டனில் உள்ள நகரங்கள் எல்லாம் தாராவியை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சார்லஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
தாராவியில் வசிக்கும் மக்கள், பயன்பாட்டுக்கு பிறகு பாலித்தீன் பை உள்ளிட்ட குப்பைகளை அப்படியே கீழே போட்டு சுற்றுச்சூழலை அசுத்தப்படுத்துவதில்லை. அவற்றை தன்மைக்கு ஏற்றவாறு தனித்தனியாகப் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் இந்த செயலுக்கு அரசு எவ்வித உதவியும் செய்யவிலலை. அவர்களாகவே செய்து வருகின்றனர். அவர்களின் இத்தகைய செயல் பாராட்டுக்குரியது.
அதேபோல, தாராவி குடிசை வாழ் மக்கள் ஒருங்கிணைந்து சமுதாய வங்கியை உருவாக்கியுள்ளனர். இந்த வங்கியின் மூலம் அவர்கள் தேவையான கடனைப் பெற்று தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றனர். சரியாக சொல்வதென்றால் தாராவி குடிசை மக்களின் வாழ்க்கை நிலை ஸ்திரமாக உள்ளது என்றும் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார். இத்தனை விஷயங்கள் அடங்கிய சார்லஸ் எழுதியுள்ள ஹார்மோனி என்ற புத்தகம் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக