ஞாயிறு, 17 அக்டோபர், 2010

யோகா மூலம் தெருச்சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிசய கிராமம்

Add caption
தர்மபுரி அருகே, கிராம மக்கள் பலரும் யோகா கற்று, தெரு சண்டையே இல்லாமல், சகோதர உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு ஊராட்சியில் சிறிய மலைக்கிராமம் அஜ்ஜிப்பட்டி. இங்குள்ள 250 குடியிருப்புகளில் 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் பெரும்பாலானவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மைசூர் மகாராஜா கட்டுப்பாட்டில் இருந்த போது, "அஜ்ஜிஹள்ளி' என அழைக்கப்பட்ட இக்கிராமம், மொழிவாரியாக மாநிலம் பிரித்த பிறகு, "அஜ்ஜிப்பட்டி' என மாறியது.இயற்கை சூழலில், இயற்கை சார்ந்து வாழும் இப்பகுதி மக்கள், கடந்த காலங்களில் வீட்டு சண்டை முதல், வீதி சண்டை வரை அதிகம் போட்டுக் கொண்டிருந்தனர். படிப்பறிவு இல்லாத மக்கள் பல்வேறு காரணங்களுக்காக முட்டி மோதியதும் உண்டு. தற்போது இக்கிராம மக்கள், யோகா கற்று அமைதியை விரும்பி வருகின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த புலனாய்வு தனிப்பிரிவு எஸ்.ஐ., வெங்கடேசன், யோகாவில் பட்டம் பெற்றுள்ளார். தன் கிராமத்து மக்களை மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், யோகா, தியானம் உள்ளிட்ட பாதைக்கு அவர்களை அழைத்து சென்றார்.இக்கிராமத்தில் மூன்றில் ஒரு பகுதியினர், யோகா கற்றுள்ளனர். இதனால், கிராமத்தில் வீட்டு சண்டை முதல் வீதி சண்டை வரை குறைந்தது. சமீபத்தில் இக்கிராமத்தில், ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்ற யோகா அறிமுக விழிப்புணர்வு விழா நடந்தது. இதில், யோகா துணை பேராசிரியர்கள் குமரவேல், கிருஷ்ணன், கோபி, முருகன் ஆகியோர் யேகா பயிற்சி அளித்தனர்.

யோகா கற்றதன் மூலம் இப்பகுதி மக்கள் கோபம், வஞ்சம், ஏற்றத்தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு ஆகியவைகளை துறந்து, அனைவரும் ஒற்றுமையுடன் சகோதர மனப்பான்மையுடன் வாழ துவங்கியுள்ளனர். 114 வயது மூதாட்டி வாழும் கிராமம்: இக்கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பெருமாயி அம்மாள் (114). இவரும் யோகா கற்று, தினமும் யோகா செய்கிறார். கிராம சூழ்நிலையில் வாழ்ந்த அவர், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, தன் பணிகளை அவரே செய்தும் வருகிறார். சில ஆண்டுக்கு முன், இவருக்கு ஊர் மக்கள் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடி சிறப்பித்தனர். ஊர் பெரியவர் என்ற முறையில், ஊரில் நடக்கும் அனைத்து விஷேசங்களுக்கும், பெருமாயி அம்மாள் தலைமை ஏற்க செய்கின்றனர்.

ஸ்ஸ்ஸ் - சென்னை,இந்தியா
2010-10-17 10:06:08 IST
எல்லாரும் யோகா , படிப்பு கற்றுக்கொண்டால் அப்றம் , அவர்களை மதம் மாற்றுவது எப்படி ?...
ப.raj - chennai,இந்தியா
2010-10-17 07:09:05 IST
வாழ்க ஒற்றுமை வாழ்க கிராம மக்கள் எல்லோரும் பின்பற்ற முயற்சி எடுக்கவேண்டும்...
ஜோக் - usa,இந்தியா
2010-10-17 05:18:07 IST
CM practices Yoga to stay healthy. The Govt should do more to spread Yoga and help people stay healthy and peaceful. Govt is just doing the opposite. Sell liquor in every village when in fact they should be selling education and Yoga in every village. Govt should help people stand on their own legs but they are making everyone a lazy dependent person by giving away free stuff. In the long run, whatever little Tamil pride is left we are going to lose due to these false-dravidian parties...
அம்பானி - n,இந்தியா
2010-10-17 04:31:16 IST
MLA MP களுக்கு யோகா சொல்லி தரவும் ......
G Sankaran - cupertino,யூ.எஸ்.ஏ
2010-10-17 01:58:59 IST
பல வேங்கடேசங்கள் உருவாகி நாட்டில் அமைதியை நிலை நாட்டட்டும். மூதாட்டி பெருமாயி அம்மாளின் புகைப்படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும்....

கருத்துகள் இல்லை: