கரு.பழனியப்பன் இயக்கி நடிகனாக அறிமுகமாகி இருக்கும் படம் ‘மந்திரப் புன்னகை’. இந்திரா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இதில் மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீடு இன்று நடைபெற்றது. இதில் பேசிய கரு.பழனியப்பன், “ மந்திரப்புன்னகை முழுக்க முழுக்க காதல் படம். உலகத்தில் மிகப்பெரியது அன்பு தான். இதை ஏராளமான திரைப்படங்கள் சொல்லியுள்ளன. அதையே வேறு கோணத்தில் இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறேன்.
இந்த கதையின் கதாபாத்திரம் என்னை அப்படியே பிரதிபலிப்பது போல் இருக்கும். அதனாலதான் இதில் நானே நடித்துவிட்டேன்,” என்று அனைத்து இயக்குனர்களும் ஹீரோவாக மாறும் போது கூறும் வழக்கமான காரணத்தையே இவரும் கூறினார்.
அவரிடம் இந்தப் படத்தின் கதை எதை மையமாகக் கொண்டது ? என கேட்டதற்கு,
மனிதன் எப்போதும் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறான். நமது கலாச்சாரத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் திருமணம் ஆன பிறகு நமக்கு திருமணம் நடந்துவிட்டது, இனி வேறு எந்த பெண்ணையும் பார்க்கக்கூடாது, என்று நினைக்கிறானே தவிர, அவன் மனதிற்குள் காதல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். மற்ற பெண்களின் மீது ஈர்ப்பும் இருக்கும். இது தான் படத்தின் கதைக்கரு.”
உங்களுக்கும் அதுபோல...?
கண்டிப்பாக இருக்கும். எனக்கு மட்டும் இல்லைங்க. அது எல்லோருக்கும் இருக்கும். அப்படி தொடர்ந்து காதலிப்பவன் தான் மனிதன். அப்படிப் பட்ட காதல் இல்லாமல் யாராவது இருந்தால் அவர்கள்தான் கடவுள்"
இப்படி கூறிவரிடம், இங்கு நீங்கள் சொன்னதை அப்படியே உங்கள் மனைவியிடம் சொல்வீர்களா? என்று வில்லங்கமாக கேட்க,
" அட... எனது மனைவிக்கே மற்ற ஆண்களின் மீது இன்னும் ஈர்ப்பு இருக்கும்ன்னு சொல்றேன். நீங்கள் என் மனைவியிடம் சொல்வீர்களா? என்று கேட்கிறீங்களே. அனைவருக்கும் அந்த ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். சமுதாயத்திற்காகதான் நாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்திக்கொள்கிறோம். நான் அப்படித்தான் எனக்கு இன்னும் காதல் இருக்கிறது" என்று அலட்டலாக பதிலளித்தார் கரு.பழனியப்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக