சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா காலனி ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (35); பெரியமேட்டில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகன் கிரிஷாந்த்(8); அண்ணா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். பள்ளி முடித்து வந்ததும், வீட்டின் அருகே உள்ள டியூஷன் மையத்திற்கு கிரிஷாந்த் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் டியூசன் சென்ற கிரிஷாந்த், இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவனை பல இடங்களில் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சசிகலாவின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், "உங்கள் மகனை நாங்கள் கடத்தியுள்ளோம். ஐந்து லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் விடுவோம். எந்த இடத்திற்கு வர வேண்டும் என ஒரு மணி நேரத்தில் சொல்கிறோம்' என்று மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்தனர்.
சிறுவனின் பெற்றோர், கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சுவிப்ட் காரில் வந்த சிலர் சிறுவனை ஏற்றிச் சென்றதாக, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். உடனடியாக, மர்மநபர்கள் பேசிய மொபைல் போன் எண் பயன்பாட்டில் உள்ள இடத்தை விசாரித்தனர். விசாரணையில், அது போலி முகவரியில் வாங்கப்பட்டது என்பது தெரிந்தது. இதற்கிடையில், சிவகுமாரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் அவரை சென்ட்ரல், செங்குன்றம், பாரிமுனை, எழும்பூர் என, இழுத்தடித்துக் கொண்டே இருந்தனர். இறுதியாக அவர்கள் ஜோலார்பேட்டைக்கு வருமாறு கூறினர். இதையடுத்து, சிவகுமாருடன், இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர், ஜான் வின்சென்ட் மற்றும் எஸ்.ஐ.,க்கள் கொண்ட தனிப்படை வேலூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றது. "ரயிலில் ஏறிவிட்டேன், பணத்துடன் வருகிறேன்' என சிறுவனின் தந்தை சிவகுமார், மர்ம நபர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். பாதி தூரம் சென்ற நிலையில்,"ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு பணத்தைக் கொண்டு வாருங்கள்' என, மர்ம நபர்கள் தெரிவித்தனர்.
எஸ்.பி., அன்பு தலைமையிலான வேலூர் போலீசார், ஜோலார்பேட்டையின் முக்கிய சாலை சந்திப்புக்களில் சோதனையில் அதிகாலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 10 மணியளவில், பள்ளிகொண்டா செக்-போஸ்ட் அருகே வந்த மாருதி சுவிப்ட் காரை மடக்கினர். காரில் இருந்த சிறுவனிடம் போலீசார் விசாரித்ததில், அவன் கடத்தப்பட்ட சிறுவன் என தெரிந்து கொண்டனர். கடத்தியவர்களிடம் நடத்த விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த வில்லியம் ஸ்டீபன் (21) சுரேஷ் (21) என்பதும், பணத்திற்கு ஆசைப்பட்டு சிறுவனைக் கடத்தியதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். சிறுவன் கிரிஷாந்த் பத்திரமாக மீட்கப்பட்டான். இந்த விவரம் சென்னையிலிருந்து ரயிலில் ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற தனிப்படை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சென்னை போலீசார் அங்கு விரைந்தனர். சிறுவனும், கடத்திய இருவரும் ஒப்படைக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், "மொபைல் போன் டவர் மூலம் கடத்தல்காரர்கள் செல்லும் பாதையை கண்காணித்தோம். அடிக்கடி, ரயிலில் செல்வதாக கூறினாலும், அவர்கள் ரயில் பாதை அருகில் காரில் சென்றது தெரிந்தது. புகார் தெரிவிக்கப்பட்ட 11 மணி நேரத்தில் மாணவனை மீட்டுள்ளோம். சிறுவனை பெங்களூருக்கு கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், வழியில் மீட்கப்பட்டான்' என்றார்.
பில - ithenadu,இந்தியா
2010-10-22 03:24:36 IST
இது என்னா புதுசா, கருணாநிதி பெர்சனல் செகரடரி பேரன கடத்துன அப்பவே அரசு வெளியில் தெரியாம ரூபாயா கொடுத்து 4 மணி நேரத்துல வெளியில் கொண்டு வந்தாங்களே உலகம் அறிந்தது தானே, ஆனா ஒன்னு மட்டும் புரியல ஏன் தி,மு.க, அட்சியில மட்டும் இப்படி...
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
2010-10-22 02:48:07 IST
போலீசுக்கு பாராட்டுக்கள்!! குழந்தைகள் கடத்தல் ஒரு மிகவும் கேவலமான மற்றும் ஓர் குடும்பத்தை சின்னாபின்னமாகும் செயல்! மிக கடுமையான சட்டம் இதை எதிர்த்து கொண்டு வரவேண்டும்....
விஜய் ஷங்கர் - நியூயார்க்,இந்தியா
2010-10-22 01:14:19 IST
"இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர், ஜான் வின்சென்ட் மற்றும் எஸ்.ஐ.,க்கள் கொண்ட தனிப்படை வேலூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றது" செம காமெடி ......!! போலீஸ் வண்டிகள் 120 கி மீ யில் சென்றால் 1.30 மணி நேரத்தில் போகலாம்...!!...
Jesuraj - Dindigul,இந்தியா
2010-10-22 00:47:48 IST
Well done Tamildanu police. hats off to you. you have done very commendable job. Keep it up....
தினேஷ் - தோஹா,கத்தார்
2010-10-22 00:18:05 IST
Hats of to the tamil nadu police they done a great job keep it up............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக