ஆயுத போராட்டத்தில் ஈடுபடவிருந்த இளைஞர்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வரவே மு.கா. உருவாக்கப்பட்டது
ஆயுத போராட்டத்தில் ஈடுபடவிருந்த முஸ்லிம் இளைஞர்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்காகவே தமது கட்சி உருவாக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது. இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடளுமன்ற சங்கத்தின் பிரித்தானிய கிளை தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யுத்த காலத்தில் ஒரு வகையான பங்கு வகித்ததாகவும், யுத்ததிற்கு பின்னரான தற்போதைய சூழ்நிலையில் இன்னொரு வகையான பங்கு வகிப்பதாகவும் தூதுக்குழுவிடம் தெரிவித்தனர். இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்க முற்றிலும் பொய்யானவை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலை இல்லாமல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாத்திரத்தின் பங்கு தொடர்பாக பிரித்தானிய தூதுக்குழுவிற்கு விளங்கப்படுத்தப்பட்டது. அத்துடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் இன்றைய நிலை தொடர்பாக இச்சந்திப்பின் போது தூதுக்குழுவினருக்கு விளக்கப்பட்டது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக