சனி, 23 அக்டோபர், 2010

ஆட்சி போய்விட்டால் என்ன ஆகும்? கட்சியினருக்கு கருணாநிதி எச்சரிக்கை

சென்னை : ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்ட தி.மு.க.,வினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: குழப்பமே இல்லாமல் நடந்த இந்த கூட்டம் எங்களுக்கு சற்று மனக்குழப்பதை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டத்தில், தி.மு.க.,வில் ஓரளவு ஒற்றுமை, செல்வாக்கு இருந்த நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியது, நற்பெயரை ஈட்டித் தந்ததோடு, கட்சியின் செல்வாக்கையும் உயர்த்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், கட்சிக்கு 30 முதல் 38 சதவீத ஓட்டுக்கள் உள்ள நிலையில், முஸ்லிம்கள், அருந்ததியினருக்கான இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு நமக்கு வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. கூட்டணிக் கட்சியினரோடும் இணக்கமான சூழ்நிலை உள்ளது. கட்சி நிர்வாகிகளிடையே நிலவும் சிறு கருத்து வேறுபாடுகளை முழுமையாக களைவதன் மூலமும், தொகுதிகளுக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி வாய்ப்புள்ளது. இது 10 ஆகவும் உயரலாம்.

எனக்கு கிடைத்த நம்பகமான, நடுநிலையான தகவலை உங்களுக்கு சொல்கிறேன். அது உங்களை புண்படுத்தலாம். ஆபரேஷன் நேரத்திலே புண்படுத்தாமல், எந்த டாக்டரும் சிகிச்சை செய்ய முடியாது என நீங்கள் கருத வேண்டும். செம்மொழி மாநாடு வெற்றி விழா பொதுக் கூட்டத்தைக் கூட தனித்தனியாக நடத்தியுள்ளீர்கள். கேட்டால், நாங்கள் இரண்டு வெற்றி விழாக் கூட்டங்களை நடத்தினோம் என சொல்லி நீங்கள் தப்பித்து விடலாம். கோவை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுக்கு மேல் நான் இருந்த காரணத்தால், மாவட்டத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் அறிந்த தகவல்களை இங்கே பெரிது படுத்தி, ஒரு விசாரணை மன்றம் அமைத்து இது உண்மையா, பொய்யா என அறிவதற்காக இந்த கூட்டம் கூட்டப்படவில்லை. தவறே இருந்தாலும், செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தவறினாலும் அவற்றையெல்லாம் திருத்திக் கொண்டு இந்தத் தேர்தலில் தி.மு.க., வெற்றிக்கு நீங்கள் பாடுபட வேண்டும். ஒன்று பட்டு போரிட வேண்டும். அதற்காகத்தான் இந்த கூட்டம். இந்த ஆய்வுக் கூட்டமே தி.மு.க.,வை வலுப்படுத்துவதற்கு பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் நடத்தப்படுகிறது. வெறும் தேர்தல் ஓட்டுகளுக்காக அல்ல. இந்த கட்சியினுடைய கொள்கைகளை, லட்சியத்தை விட்டு விட்டு, ஆட்சியிலேயே உட்கார வேண்டும் என எண்ணுகிற யாரும் தி.மு.க.,வில் இருக்க தகுதி படைத்தவர்கள் அல்ல.

இந்த லட்சியம், கொள்கைகள் வெற்றி பெற, நாடு பலன் பெற இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால் முடிந்த வரையில் இந்த ஆட்சியை பயன்படுத்திக் கொள்கிறோம். ஒரு வேளை ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம். இந்நிலையில், நிர்வாக ரீதியாக வேறுபட்டு, ஒவ்வொரு ஊரிலும் இந்த இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதில் வேறுபாடுகளை பொருட்படுத்திக் கொண்டிருந்தால், தி.மு.க., வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தி.மு.க.,வின் வெற்றியில், நம் கொள்கை வெற்றியிருக்கிறது. அண்ணாதுரையின் லட்சியம் இருக்கிறது. அந்த இரண்டும் தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்தால்தான் நிலைக்கும். இல்லாவிட்டால் அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய் விடும். நம் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி, அது அம்மையாருடைய ஆட்சியாக இருக்குமேயானால், அங்கே அண்ணாதுரை, ஈ.வெ.ரா., கொள்கைகளுக்கு இடமில்லை. ஜாதி மறுப்புக்கு இடமில்லை. மூடநம்பிக்கை மறுப்புக்கு இடமில்லை. அப்படிப்பட்ட மவுடீகம், மூடநம்பிக்கை படர்ந்து, காடாக ஆகியிருக்கின்ற ஒரு ஆட்சியைத்தான் நாம் காண நேரிடும். நாம் வெற்றி பெற வேண்டும் என நான் எண்ணுவதற்கு காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நமது கொள்கைகளை காப்பாற்றுவதற்காகத்தான். எனவே நாம் ஒன்றுபடுவோம். தொடர்ந்து நமது அணியை நடத்திச் செல்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-23 09:27:19 IST
""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார். தாத்தா, இத்தனை வருஷம் தமிழ் படிச்சும் எழுத்துப்பிழை வரலாமா தாத்தா? அதுவும் செம்மொழி கனிமொழி மாநாடு நடத்துன கோவை பத்தி பேசும்போது? ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார், அப்படீன்னு தானே இருக்கணும்.....
Daran - Chennai,இந்தியா
2010-10-23 09:24:05 IST
இந்த மஞ்ச துண்டு பெருசுக்கு பதவி வெறியும் ,பண வெறியும் அடங்கவில்லை. உங்க கொள்கையே ராஜதந்திரமாக ஊழல் செய்து, மக்களை ஏமாற்றி சொத்து சேர்ப்பது. இது தவிர கொள்கை,கோட்பாடு என்று ஏதாவது உண்டா ????...
மஞ்சள் துண்டு - சென்னை,இந்தியா
2010-10-23 09:22:24 IST
உங்கள் லட்சியமே கொள்ளை அடிப்பதுதானே............
மானமுள்ள தமிழன் - பெங்களூர்,இந்தியா
2010-10-23 08:50:27 IST
லொள்ள பாரு...!!! எகத்தாளத்த பாரு...! ஆட்சி மாற்றம் உறுதி என்ற நம்பகமான தகவல் மஞ்சள் துண்டாரை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள் மக்களே..!!...
iindian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-23 08:49:15 IST
ஆமா அது என்னய்யா ஒங்க கொள்கை? பல்லாயிரம் கோடி லஞ்சம் வாங்குவதா? அம்பது ௦தலைமுறைக்கு சுவிஸ் பாங்கில் பணம் சேர்த்து வைக்கிறதா? தமிழ் நாட்டை மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகளுக்கு பங்கிட்டு கொடுப்பதா? தெருவுக்கு பத்து சாராயக்கடை திறப்பதா? தமிழ்நாட்டின் நலன்களை சொந்த வியாபாரத்துக்காக அடகு வைத்து தமிழ்நாட்டை தண்ணீர் இல்லா பாலைவனம் ஆக்குவதா? உழவு, நெசவு தொழில்களை அடியோட அழிப்பதா? சுகாதார சீர்கேட்டின் மூலம் மக்களுக்கு சிக்குன் குனியா கொடுப்பதா? தமிழ்மக்களை இருட்டில் சாகடிப்பதா? லஞ்சத்தை அரசு அலுவலகங்களில் எழுதாத சட்டம் ஆக்குவதா? அரசு ஊழியர்களுக்கு தான் கொள்ளை அடிக்க துணை புரிவதற்காக அள்ளி அள்ளி கொடுப்பதா? மக்கள் வரிப்பணத்தில், ஊதாரித்தனமாக, சொந்த விளம்பரத்துக்காக, தி மு க காரர்கள் கொள்ளை அடிக்க இலவச திட்டங்களா? மாவட்டம், போக்கு வரத்து கழகங்களுக்கு ஜாதி தலைவர்கள் பேர் வைத்து ஜாதி கலவரம் உருவாக்குவதா? இந்துக்களை திருடர்கள் என்று பட்டம் கட்டுவதா, மதக்கலவரம் தூண்டுவதா? இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்து நட்டாற்றில் விடுவதா, நான்கு மணி நேரம் உண்ணா விரத கேலி கூத்தா? தமிழ் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதா, தனக்கு தானே பட்டங்கள் கொடுத்து கொள்வதா? தமிழ்நாட்டை கொலை, கொள்ளைகளின் இருப்பிடம் ஆக்குவதா ? கல்வி வியாபாரம் செய்து எல்லா இளம் தலை முறையினரையும் வீதியில் அலைய விடுவதா? கூத்தாடிகளுடன் கும்மாளம் போடுவதா? கள்ள வோட்டு போடுவதா? ரேஷன் பொருள் கடத்துறதா? மணல் கொள்ளையா? இலவச டிவி என்ற பேரில், தனது டிவி வியாபாரமா?, மக்களை ஆபாசபடங்களுக்கு, கேடு கேட்ட டிவி சீரியல்களுக்கு அடிமையாகுவதா, சோம்பேறிகள் ஆக்குவதா?...
Thiagarajan - Chennai,இந்தியா
2010-10-23 08:48:44 IST
""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' அப்படியல்ல! ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொண்டவற்றை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' கலைஞரின் பதட்டம் புரிகிறது?...
வீரா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-23 08:45:05 IST
சென்னை : ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள் (ளை)கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார்....
jeyapandian - theni,இந்தியா
2010-10-23 07:23:52 IST
Typo, should be read like this "இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்ளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்"...
சிவா பாலா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-23 07:05:19 IST
கொள்கையா? கொள்ளையா? சிலருக்கு இரண்டும் ஒன்றுதான். கொள்ளையே கொள்கைதான்....
தமிழன் - Madurai,யூ.எஸ்.ஏ
2010-10-23 06:55:17 IST
என்னால என்னோட கோவத்தை அடக்க முடியல ...கொள்கையா ???????? அப்படினா ???? 8 வயது என் பயனுக்கே உங்கள பத்தி நல்லா தெரியுது. நாங்க ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி மு கூ இல்ல சரியா ????...
கருத்து கண்சாமி - திண்டுக்கல்,இந்தியா
2010-10-23 06:34:59 IST
இன்ன தலைவரே அப்போ கோயம்புத்தூர் அவுட்டா? என்ன என்னமோ ஆபரேசன் வலி அது இது நு கதை விடறதுக்கு முன்னாடி உங்க கட்சி கோயம்புத்தூர் ல எதுமே நல்லது செய்யலியா? நல்லது செஞ்ச கோயம்புதூர் என்ன எந்த ஊருக்கும் பயப்பட தேவை இல்ல..இதுல எதுக்கு ஆட்சி போயிரும் கொள்கை அது இது நு பில்ட் அப் விடணும்...எனக்கும் என்னவோ கோயம்புத்தூர் உங்க கைய விட்டு போயிரும்னு தான் தோணுது போங்க வர எலெக்சன்ல...மதுர மாதிரி பிரியாணி சரிபட்டுவருமா தெரியல என்னமோ பண்ணுங்க போங்க கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பண்ண?...
ராஜன் - singapore,சிங்கப்பூர்
2010-10-23 06:19:47 IST
பண்ணியதெல்லாம் இவரும் இவர் குடும்பத்தினரும் .... ஆனால் பழி மட்டும் கட்சியினர் மீதா? கருணாநிதிக்கு ஆட்சி போய்விடும் என்ற பயம் வந்து விட்டது. கட்சியினர் பண்ணியதெல்லாம் இவரையும் இவர் குடும்பத்தையும் ஒப்பிட்டால் கால் தூசிதான். நடந்த ஆட்சியின் அவலங்கள் அனைத்துக்கும் இவரும் இவர் குடும்பமும்தான் பொறுப்பு....
ABCD - chennai,இந்தியா
2010-10-23 06:18:25 IST
கருணாநிதி--- பதவி முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம். இதை தன் வாரிசுகளுக்கு சொல்லலாமே? கட்சிக்காக உழைபவர்களுக்கு கொள்கை. தன் வாரிசுகளுக்கு பதவி...... சூப்பர்.....
2010-10-23 05:44:30 IST
கொள்கையா தலைவரே ? காமடி பண்ணாதீங்க. கொஞ்சம் வாய் தவறி கொள்ளை என்பதை மாற்றி சொல்லிட்டீங்க. திமுகவில் ஏதப்பா கொள்கை? குடும்பம் தானே திமுக...
karunanidhi - Tokyo,ஜப்பான்
2010-10-23 05:40:34 IST
""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார். மேலும் கொள்ளை அடிப்பதையும் காப்பாற்ற முடியாமல் போய்விடும்,...
பிரபா - chennai,இந்தியா
2010-10-23 05:36:13 IST
தேர்தல் வந்தால் தான் கருணாநிதிக்கு கொள்கைகள் எல்லாம் நியாபகம் வரும்... அம்மா ஆட்சி தான் அடுத்து என்ற பயம் கருணாநிதியின் பேச்சில் நன்றாக தெரிகிறது......
jopet - singapore,சிங்கப்பூர்
2010-10-23 05:19:10 IST
இது எங்கள் (திமுக )கட்சிக்குள் நடக்கும் கலந்துரையாடல், அதனால், இதைபற்றி ஆர்வகோளாறுள்ள( busybody ) அதிமுககாரர்கள் கமெண்ட் எழுத தேவையில்லை.அவரவர் கட்சிக்குள் நுழைந்து பார்த்தால் ஏகப்பட்ட ஒட்டடைகள் தொங்குவது தெரியும். என் தலைவர் தன கட்சி கூட்டத்தில் கூட ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்லும் அளவுக்கு நாகரீகம் தெரிந்தவர் என்பதை இந்த செய்தியை படித்து தெரிந்து கொள்ளலாம்....
அன்வர்ஷா - சென்னை,இந்தியா
2010-10-23 04:34:05 IST
//இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,// இதில் ஒரு சிறு தவறு. கொள்ளைகளை என்று இருக்க வேண்டும்....
R.டவுட் தனபாலு - இந்தியா,இந்தியா
2010-10-23 04:20:40 IST
இலவசத்தை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவது தான் உங்கள் லட்சியமா? உங்களின் உண்மையான கொள்கை என்ன? மறு படியும் ஆட்சிக்கு வருவோம் னு சொல்றிங்களே அது எந்த நம்பிக்கையில்?...
ஜீவா - திருநெல்வேலி,இந்தியா
2010-10-23 04:06:56 IST
"தி.மு.க.,வில் ஓரளவு ஒற்றுமை, செல்வாக்கு இருந்த நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியது, நற்பெயரை ஈட்டித் தந்ததோடு, கட்சியின் செல்வாக்கையும் உயர்த்தியுள்ளது"...... அப்போ நீங்க தமிழ வளர்க்க அந்த மாநாடு நடத்தலையா? அரசாங்க செலவுல உங்க கட்சி செல்வாக்கு கூடிட்டு நு நீங்களே ஒத்து கொள்றீங்க அப்பிடித்தானே?......
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-10-23 04:05:10 IST
இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார். சாரி கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்று எச்ச்சரிதுள்ளாரா? எங்கப்பா இந்த திமுக அல்லகைங்க, என்னமோ திமுக வெற்றி பெறும் என்று மார்தட்டினார்களே, இரண்டு நாளைக்கு முன் ஆயிரம் அதிமுக வந்தாலும் நம்மை வெல்ல முடியாது என்று சொன்ன அதே வாய், இப்பொழுது ஒரு வேளை ஆட்சிக்கே வர முடியாவிட்டால்? தெருவிலே நின்று போராடுவோம் என்று கூறுவதில் இருந்து என்ன தெரிகிறது, துண்டுக்கே நன்றாக தெரிந்துவிட்டது, நாம் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்று. இதற்க்கு உதாரணம் நம் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி, அது அம்மையாருடைய ஆட்சியாக இருக்குமேயானால்!!!! இதற்கு என்ன அர்த்தம் திமுக அல்லகைகளா, மதுரை மாநாட்டை பார்த்து மஞ்ச துண்டு கிலி வந்துவிட்டது, நாம் காவல் துறையை வைத்து இவ்வளவு தடை செய்தும், லட்ச கணக்கில் கூட்டம், தடை செய்யாமல் இருந்திருந்தால்??? நாம் எவ்வளவு தில்லு முல்லு செய்தாலும், கோடி கோடியா பணத்தை வாரி இறைத்தாலும் ஜெயிப்பது மிகவும் கடினம், சாத்திய கூறு இல்லை என்று தெரிந்துவிட்டது, எப்பவுமே மஞ்சள் இப்படி சொல்லாது, அதுவே இப்படி சொல்லுது என்றால் பார்த்துகோங்க, இதுவே அதிமுகவுக்கு பாதி வெற்றி தான்....
iyappan - நாகர்கோயில்,இந்தியா
2010-10-23 03:24:37 IST
சென்னை : ""இந்த ஆட்சி போய்விட்டால், நமது கொள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்,'' என தி.மு.க.,வினரை கருணாநிதி எச்சரித்துள்ளார்..பாவம் தமிழன் .....
தமிழ்மகன் - சென்னை,இந்தியா
2010-10-23 03:07:46 IST
மாநில அரசு, மத்திய அரசு, பணபலம், அதிகாரபலம், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுபினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சிகள், வலுவான இரண்டாம் கட்ட தலைவர்கள், ம செ'க்கள் , கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் இவ்வளவு பேர் இருந்தும் கருணாநிதிக்கு பயம், எங்கே தனது ஆட்சி பறிபோய்விடுமோ,,,,,பயப்படுகிறார்,,,, பதறுகிறார்,,,,,, யாரை பார்த்து பயப்படுகிறார்,,,,,, ஜெயலலிதா என்ற ஒரு பெண்மணியை பார்த்து.......(நம் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி, அது அம்மையாருடைய ஆட்சியாக இருக்குமேயானால்) மேலே உள்ள செய்தியின்படி உண்மையாகவே கருணாநிதிக்கு தோல்வி பயம் படுபயங்கரமாக பற்றிக்கொண்டது வெளிப்படையாகவே புலப்படுகிறது.........
சேகவி - mahe,செசேல்ஸ்
2010-10-23 02:54:16 IST
தி,மு,க.வின் கொள்கைகள், லட்சியங்களை விட்டுவிட்டு,ஆட்சியில் உட்கார வேண்டும் என நினைப்பவர்கள் தி,மு,க.வில் இருக்க தகுதி இல்லை என்றால் நீங்க தி,மு,க.வில் எப்படி இருக்கீங்க?யோசிச்சு பேசுங்க அப்பு!...
கிங் காங் - மதுரை,இந்தியா
2010-10-23 02:42:31 IST
"கொள்கைகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும்" - ஏம்பா இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதும் இல்லியே...
குஷி - india,இந்தியா
2010-10-23 01:39:43 IST
பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு...
சங்கர் - தூத்துக்குடி,இந்தியா
2010-10-23 01:29:33 IST
தலைவரே உங்க கொள்கை என்னன்னு கொஞ்சம் தெளிவா தஞ்சாவூர் கல்வெட்டுலே செதுக்கி அது பக்கத்திலே உக்காருங்க. நமக்கு பின்னாலே வர்ற சந்ததிகள் அதை பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-23 01:20:25 IST
கொள்கைகளை காப்பாற்ற ஆட்சி தேவை. உண்மைதான். ஆனால் கொள்கை என்பது அடித்த கொள்ளையை காப்பாற்றுவது தானே?அண்ணா,பெரியாரின் கொள்கைகள் என்ன? உலக பணக்காரர் ஆவதா ?...

கருத்துகள் இல்லை: