வெள்ளி, 22 அக்டோபர், 2010

Vijayakanth சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணியா? விஜயகாந்த் சூசகம்

""ஆட்சியாளர்கள், பிரேக் இல்லாத வாகனத்தை நிதானம் இல்லாமல் இயக்கி விட்டனர். இனி அந்த வாகனத்தை அவர்களே நினைத்தாலும் நிறுத்த முடியாது. அது கவிழ்ந்து, விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி, '' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தனர். கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் விஜயகாந்த் பேசியதாவது: எனக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்டு மரியாதை குறைவாக பேசுகின்றனர். மக்களின் வறுமையை ஒழித்து வருமானத்திற்கு வழிசெய்வதுதான் எனது கொள்கை. நீங்கள் போடா என்றால் நானும் போடா என்பேன்; வாடா என்றால் நானும் வாடா என்பேன். காரணம் எனக்கு பயம் கிடையாது.

புதிதாக கட்சி ஆரம்பித்து நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்கின்றனர். முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படுவது சத்தியமாக, வாஸ்தவம் தான். ஆனால், துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரியால் அதை தைரியமாக கூற முடியுமா? அணையப்போகும் விளக்குதான் சுடர் விட்டு எரியும். காமன்வெல்த் போட்டி மூலம் கல்மாடி 8,000 கோடி ரூபாய் ஊழல் செய்தார், ஐ.பி.எல்., கிரிக்கெட் மூலம் லலித்மோடி 470 கோடி ரூபாய் ஊழல் செய்தார் என்கின்றனர்.இதிலிருந்தே இந்தியாவை ஊழல்வாதிகள் ஆளுகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

மக்களுக்கு இலவச "டிவி', காஸ் அடுப்பு, அரிசி கொடுத்து விட்டால் வறுமை ஒழிந்து விடாது. அவர்களின் வருமானத்திற்கு வழி செய்தால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். அதற்காக நல்ல பல திட்டங்களை சிந்தித்து கொண்டு இருக்கிறேன். இலவசங்கள் கொடுத்ததை சாதனை என்று கூறுபவர்கள், ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது வேதனையாக இருக்கிறது. அவர்கள் கோடி கோடியாக சொத்து சேர்த்து இருப்பதால் நோட்டுக்களை கொடுக்கின்றனர்.

ஆட்சியாளர்கள் "பிரேக்' இல்லாத வாகனத்தை நிதானம் இல்லாமல் இயக்கி விட்டார்கள். இனி அந்த வண்டியை அவர்களே நிறுத்தினாலும் நிறுத்த முடியாது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி. பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஊழல் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களில் தான் ஊழல் தலை விரித்தாடுகிறது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறுவது உண்மை. நான், பா.ஜ.,வை பற்றி பேசினால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்போகிறேன் என்பார்கள். நான் மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டும் தான் கூட்டணி வைப்பேன். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நாட்கள் நெருங்கும் நேரத்தில் அதை பார்த்துக்கொள்வேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

திருப்பூரில் பொதுக்கூட்டம்: மத்திய அரசின் பஞ்சு ஏற்றுமதி கொள்கையை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் இன்று பொதுக்கூட்டம் நடக்கிறது. மத்திய அரசின் பஞ்சு ஏற்றுமதி கொள்கையை கண்டித்தும், நலிந்து வரும் ஜவுளித் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பருத்தி ஏற்றுமதியை தடை செய்யக் கோரியும், நூல் விலை உயர்வை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. திருப்பூர் யூனியன் மில் ரோடு, ஸ்ரீதி தியேட்டர் முன் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்துக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகிக்கிறார். அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தை வரவேற்று பேனர்களும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன.
selva - chennai,இந்தியா
2010-10-22 19:18:54 IST
அய்யா விஜயகாந்தே , ADMK , DMK , இதில் யாருக்கும் உன்னுடைய கூட்டணி தேவை இல்லை , உங்களுக்கு தேவைபடுதுன்னு என்ற தைரியமா உண்மைய ஒத்துகிங்க...
rajasekar - singapore,இந்தியா
2010-10-22 18:07:36 IST
டே சிங்கப்பூர் சேகர் உன்னைய பெத்த அம்மாவை தெய்வம்னு சொல்லு நானும் அவுங்களை வணங்குறேன். அதை விட்டுட்டு சினிமா நடிகை எல்லாம் தெய்வம்னு சொல்லி ஒரு உன்னதமான தாய் என்கிற ஸ்தானத்தை கேவலப்படுத்தாதே....
தேவர் மகன் - london,இந்தியா
2010-10-22 17:50:33 IST
விஜயகாந்திற்கு நன்றி...
சிவாஜி - சென்னை,இந்தியா
2010-10-22 17:21:54 IST
ஹாய், விஜயகாந்த் எப்படி இருக்க, என்ன கட்சி ஆரம்பிச்சிட்டியா , என்பா,...
Venkatesh - Chennai,இந்தியா
2010-10-22 17:12:09 IST
கேப்டன் சார் கலைஞர்க்கு மொத மொத மொதல்ல விழா எடுத்ததே இவர்தான் இன்னிக்கு ரூட்ட மாதறாரு. தமிழ் தமிழ்னு பேசுவாரு வீட்ல தெலுங்குதான். இலங்கை பிரச்சனை வந்தா மூடிகினு இருப்பாரு. உள்ள புடுச்சி போட்டாங்கன்னா இவருக்கு பயம் கிடையாதாம், மூஞ்சிய பாரு...
venkatesh - Chennai,இந்தியா
2010-10-22 16:54:38 IST
கணேஷ் சுபரமனியன் இப்ப என்ன உங்க கேப்டன் காசு பாக்காமயா இருக்காரு. நீங்க வேற அட்வைஸ் கொடுக்குறீங்க. இப்படி ஒரு அரசியல் தந்திரமா. போனதடவை MP electionla முன்னுறு கோடி ருபாய் விஜய் மல்லையகிட்ட காங்கிரசுகிட்ட இருநூறு கோடியும் வாங்கினது தெரியுமா. ஆட்சிக்கு வரதுக்கு முன்னாலய இந்த லட்சணம் வந்தால் கிழிஞ்சுது தமிழ்நாடு....
Babu - chennai,இந்தியா
2010-10-22 16:45:53 IST
ஹலோ பிரிஎண்ட்ஸ் இப்பொழுது உள்ள நிலைமையில் நமக்கு வேண்டியது ஆட்சி மாற்றம் தான். நான் சொல்வது மீண்டும் அ தி மு க ஆட்சி அல்ல. நமக்கு வேறு புதிய ஒரு நல்ல தலைவர் வேண்டும். கருணாநிதியும் ஜெயலலிதாவும் நிறைய பார்த்து விட்டோம். அடுத்தது விஜயகாந்த்தான் இருக்கிறார், இவர் ஒரு புதிய அரசியல் தலைவர், அதனால் மற்றவர்களை போல் இவர் கண்டிப்பாக இருக்க சத்தியம் இல்லை. ஒரு வாய்ப்பு கொடுத்தால்தான் அவர் நல்லவரா அல்லது அவரும் மற்றவங்களை போல தான என்று நமக்கு தெரியும். மேலும் நம்மில் சிலருக்கு ஒரு தலைவரை எப்படி விமர்சிப்பது என்று தெரியல. இங்கே சிலர் அவரை ரொம்ப கேவலமா எழுதி இருகிறார்கள். இது தமிழர்களுக்கே அவம். தயவுசய்து இப்படி யாரையும் தரகுறைவா எண்ணாதீர்கள். இது நம் இனத்துக்கே அவமானம். அதனால் இளம் வாக்காளர்கள் வோட்டு கண்டிப்பாக விஜயகாந்துக்கு விழும். கண்டிப்பாக சரித்திரம் மாறும்....
சிவகுமார் - Bangalore,இந்தியா
2010-10-22 16:40:36 IST
டேய் சிங்கப்பூர் சேகரு , இங்க ஊருல இருக்கிற உன்ன பெத்த தெய்வம் உங்க அம்மாவுக்கு சோத்துக்கு பணம் அனுப்புறியோ இல்லியோ ஜெயலலிதாவுக்கு தெனம் ஓவரா காவடி தூக்குற . ங்கோயா " அம்மாவை தானே நாம் எல்லோரும் தெய்வம் என்கிறோம்" உன்னமாதிரி முட்டா பயலுங்களுக்குதான் அது அம்மா ....
சந்திரமௌலி - சென்னை,இந்தியா
2010-10-22 16:39:34 IST
பாரதீய ஜனதா கட்சி மதவாத கட்சி என ஒதுக்கி வைப்பதால் நஷ்டம் அந்த கட்சிக்கு இல்லை. இந்த நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள கட்சி பாரதீய ஜனதா சுய லாபத்திற்காக மற்ற கட்சிகள் அதனை மதவாத கட்சி என கூறி ஒதுக்கி வைத்துள்ளன. இதே திமுக அக்கட்சியுடன் கூட்டணி வைத்து பதவி கண்டது மறந்து விட்டதா? பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு உதாரணம் குஜராத் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்சி விகிதத்தில் பெரும் பங்கு குஜராத் மாநில வளர்ச்சி என்பது காங்கரஸ் கட்சி ஏற்று கொள்ளும்...
ஜெயக்குமார் - ரத்தபூமி,இந்தியா
2010-10-22 16:29:35 IST
மத்த நாட்களில் இந்த அரசியல்வியாதிகளை பார்க்க முடியாது.... தேர்தல் நேரத்தில் மட்டும்.... ஈசல் போல புறப்பட்டு வந்து,, அம்மா, தாயேனு ஏன்டா ஓட்டு பிச்சை எடுக்குறீங்க??? எங்களுக்கு சேவை செய்ய அவ்வளோ விருப்பமோ? ஐ.டி. வந்து பல சாதாரண குடும்பங்களும் நல்ல வாழ்றதனால சரியா போச்சு......
sha - சென்னை,இந்தியா
2010-10-22 16:25:52 IST
விஜய காந்த தான் ஒரு தமிழன் என்றும், மதுரைகாரன் என்றும் சொல்லிக்கொள்கிறார். அவர் ஒரு தமிழன். ஜெயலலிதா தமிழர் இல்லை. ஆனால் அவரை சுற்றி இருந்தவர்கள், இருப்பவர்கள் தமிழர்கள். விஜயகாந்தை சுற்றி உள்ள இரண்டாம் கட்ட தலைவ்வர்களில் யார் தமிழன். இவன் இப்பொழுதே சொந்தங்களையும், தெலுங்கு பேசுபவர்களையும் மட்டுமே உடன் வைத்திருக்கிறார். தமிழர்களே ஜாக்கிரதை....
பாபு anand - Chennai,இந்தியா
2010-10-22 16:22:11 IST
from all these comments I understand one thing. Our people will never think new. they will only mock someone who think for an innovation. Some of these fools have terribly censured vijaykanth as they have no nerve in their bloody nerves. But one should understand, in this political scenario, we definitely need a new stream. unless we experience someone in the power we cannot simply curse him. Actually as many of the youth believe in vijayakanth I also believe definitely he we give a different type of regime and approach. So pls all youths vote for him if he contests alone and do not hear all these rubbish comments from these fools. We have to bring a new blood to the power then only there will be a new style of politics emerging. then only there will be a change in TN politics...
நீதிபதி - சென்னை,இந்தியா
2010-10-22 16:20:51 IST
அரசியல் தெரியாத அனாகரிகங்கலே. ஏன்டா இப்படி பினாதிறிங்க. இந்த நடிகனுக்குத்தான் வேலை இல்லை. மக்களுக்கு என்ன திட்டம் போடலாமுன்னு உட்கார்ந்து சிந்திக்கிறாராம். இதைதான் கொள்கை இல்லாதவன்னு சொல்றாங்க. போய் வேலையை பாருங்கப்பா....
aravind - chennai,இந்தியா
2010-10-22 16:06:12 IST
So, based somany response, vijayakanth is very Powerful person....
குன குப்புன்ன - coimbatore,இந்தியா
2010-10-22 16:01:33 IST
Hello hello Hello everybody is waste fellow...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-10-22 15:57:20 IST
கணேசன் - chennai,இந்தியா, even DMK wins next assembly election, we wont feel anything, because DMK party will not continue next five year terms because of yellow shawl health condition. Last time DMK won 90 seats from 160 seats contested, but this time congress demands more than 100 seats, so if DMK needs congress, he has to dedicate around 100 seats, so even if dmk wins, it will be again minority government. just imagine, when dmk got 90 seats out of 160 seats contested last time, then now if dmk contest in 130 seats, it will not sweep all the 120 seats, so it may sweep 60 seats compared to last time. Again it will be advantage for our amma. After the demise of yellow shawl karunanidhi, defenitely alagiri will never accept stalin to become CM, and there will be huge fight which will eventually leads to DMK party split into pieces. Those party who supports DMK will transfer bulk to admk. DMK win will not be permenant. ADMK will be ruling the TN forever. The situation now is different, people started thinking about the bad effects of freebies, and scientific corruptions of DMK, and different approach of jayalaitha will favour ADMK this time. Just wait and see. We will ask you one question, if ADMK wins coming assembly election, how do you feel?...
சேது - பவானி,இந்தியா
2010-10-22 15:48:46 IST
இன்றைய தமிழகம் இன்னும் ஒரு நாள் பிழைப்பிற்கு மட்டுமே வாழ்க்கையை நடத்திகொண்டிருகிறது..... ஒட்டு போடும் அன்று யார் அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை.... அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு தெரியாததா?........ மக்களே உங்களுக்கு சுய புத்தியே இல்லையா........
அர்கோட்டான் - Chennai,இந்தியா
2010-10-22 14:42:24 IST
அன்புள்ளம் கொண்ட விஜய காந்த் அவர்களே, எதிர் வரும் சட்ட மன்ற தேர்தலில், தங்கள் தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து நடத்தி அதிமுக வுக்கு சங்கூதி, மணியடித்து, பச்சை மட்டையில் ஏற்றி விடுங்கள். அத்துடன் துரோகத்தில் முளைத்த விஷக்காளான் அழிந்து விடும். நெல்லிக்காய் மூட்டை தெறித்தது போல விசிலடிச்சான் குஞ்சுகள் அரசியல் அனாதை ஆகி விடுவார்கள். அப்பொழுது தாங்கள் எதிர் கட்சி, அரசியல் கண்ணியம் நிறைந்த ஸ்டாலின் ஆளும் கட்சி....
ராம் துபாய் - துபாய்,இந்தியா
2010-10-22 14:38:38 IST
நண்பர்களே, ஒரே ஒரு கருத்தை சொல்ல விரும்புகின்றேன். இப்பொழுது நடக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு என்ன வழியோ அதை நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். நடப்பு ஆட்சியும் ஆட்சியாளர்களையும் ஒப்பிட்டால் மற்ற அனைவரும் கொஞ்சமாவது மனசாட்சியும் பொது அக்கறையுள்ளவர்கள் என்று நான் கருதுகின்றேன்....
m.vasudevan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-22 14:21:08 IST
I would like to invite your kind attention in a serious issue, which we are facing now. I am Girija Vasudevan, born & brought up in coonoor Village, Nilgiri dist. Our old generation was immigrated from Kerala to Tamilnadu several Years back and holding Ration cards and residential certificates etc. But now our new generation is facing a very big problem that is they are born & brought up in the above place & well educated. But they are not able to get a Govt. job due to lack of Community certificate. Our community is “Malayalee Ezhava” (B.C.), Previously it was issuing by Thahasildar & since 10 years he has not issuing community certificate. We have inquired about this to Thahasildar and he couldn’t give a satisfactory clarification against our inquiry. Because of this our well educated new generations are working as “Labors” in several Tea Estates and they are spoiling their future due to lack of a community certificate. Actually we all are the supporters of DMK from several years, because of this we have complained in local bodies of DMK several times. But till now no one took any step against our complaint. Now we strongly believing that, if we will complaint directly to you we will get a Good response because, you are one of the most youngest leaders in DMK and moreover this, in the base of your highlighted merciful character You are giving importance for solving the problems of “Poor and Helpless Peoples” like us. If we will not get this certificate, defiantly our new generation’s education will be meaningless and their future will full fill with darkness. So I am humbly requesting you that, Pl consider this mail as a favorable & serious one and pl. take necessary action on our serious issue. I do hope that you will consider my mail and take necessary steps against my complaint. If you will do it might help as a lot and highly appriciatable. Waiting for a favorable reply. Thanking you Sir, Yours truly, M Vasudevan. DUBAI UAE...
prakash - chennai,இந்தியா
2010-10-22 14:01:22 IST
விஜயகாந்த் கருத்துகள் உண்மை...
ராஜா - திருச்சி,இந்தியா
2010-10-22 13:47:36 IST
அடடா!!! வெசயகாந்து!!! உங்களுக்கு ஆரம்பத்துல s.a.சந்திரசேகர்,லியாகத் அலிகான், இவுங்க எழுதும்போது கேக்க நல்லா இருந்துச்சு!!! இப்போ பேசுறது ஒண்ணுமே வெளங்கலே!!! அவங்க இப்போ எழுதினா தேவலை. நீங்க இப்போ பேசுறது எல்லாமே ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிட்டு பேசுறமாதிரியே இருக்கு. பி.ஜே.பி.கூட இப்போ காமன்வெல்த் ஊழல்,சவப்பெட்டி ஊழல், லேட்டஸ்ட்டாக ம.ஜ.தா. M.L.A. வை இழுக்க பேரம் பேசிய சி.டி.யுடன், ஊழலின் உச்சத்திற்கு சென்று கொண்டுள்ளது. டெய்லி பேப்பர் நீங்களே படிங்க, எழுதிக்கொடுத்து கவுதிருவான்கே!!! வாடா!!! போடா!! என்று பேசினால் முதல்வராவுறது கனவோட கானாபோயிரும்,கவனம்!!! உலகம் அளியிரதுக்குள்ள உங்க திட்டங்கள மக்களுக்கு சொல்லிருங்க!! இப்படி கடவுள் கூட்டணின்னு பேசினா நாம எல்லோரும் கடவுள்கிட்ட போன பிறகு அங்கெ அவருகிட்ட போயி எல்லாம் படிஞ்சி கூட்டணி அமைச்சி ஆட்சியை புடிக்கலாமுன்னு சொல்லுறியளோ!!!...
முத்துக்குமார் ப - ராமநாதுபுரம்மண்டபம்,குவைத்
2010-10-22 13:45:31 IST
தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும் என்றால், நீங்கள் BJP உடன் கூட்டணி வைத்து கொள்ளலாம்....
கணேசன் - சென்னை,இந்தியா
2010-10-22 13:32:50 IST
சிங்கபோரே ப சேகர், you are today, talk of the Day man. First 'Amma' do you know this word manthras. Don't compare other person than your mother. I cannot understand your family details. You could be loyally in ADMK, but don't compare other person (like film actress) to your mother. This compare is 'Lacking or marked by lack of intellectual acuity' Mind it. Ganesan...
shiny - Bangalore,இந்தியா
2010-10-22 13:31:59 IST
யோவ் கே.கைப்புள்ள! உன் அட்டகாசம் தாங்க முடியலையா! சும்மா கலக்கு கலக்குனு கலக்குற! உங்க கமெண்ட்ஸ் படிக்கவே நான் தினமும் தினமலரை படிக்கிறேன். நீ என்ன வேல பண்ணற- பா ?...
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
2010-10-22 13:25:38 IST
இந்த குடிகார பயலுக!!!எங்களையும் அல்லவா? தலை சுற்ற வைக்கிறாங்க?ஜெயலலிதா வாயில சீனிதான் போடணும்....
இலட்சுமண சாமி - சென்னை,இந்தியா
2010-10-22 13:21:07 IST
பிரேக் இல்லாத வாகனத்தை நிதானம் இல்லாமல் இயக்கி விட்டனர். இனி அந்த வாகனத்தை அவரே நினைத்தாலும் நிறுத்த முடியாது. கூட்டணி என்ற பிரேக் போட்டால் தான் அவர் வாகனம் (தே.மு.தி.க) நிறுத்த முடியும். இல்லை என்றால் கவிழுந்து விடும். இதற்க்கு பேருதான் ரிவிட்டு........
கணேஷ் சுப்ரமணியன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-22 13:12:19 IST

கருத்துகள் இல்லை: