பெர்லின் : "ஹிட்லரை ஜெர்மன் மக்கள் உயர்த்திய அளவுக்கு, ஜெர்மன் மக்களை ஹிட்லர் உயர்த்தவில்லை' எனும் கருத்து வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பிரபலம்.
ஜெர்மன் மியூசியத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட கண் காட்சியும், மேற்கூறிய கருத்தை வழிமொழிந்துள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின், ஹிட்லர் தொடர்பான கண்காட்சி ஒன்று உள்நாட்டில் நடப்பது இதுவே முதல் முறை. "ஹிட்லரும் ஜெர்மன் மக்களும்' என்ற தலைப்பிலான கண்காட் சியில், ஹிட்லரை மையப்படுத் தாமல், அக்கால மக்களின் வாழ்க்கை முறைக்கே முக்கியத் துவம் கொடுக்கப் பட்டிருந்தது. ஹிட்லர் மற்றும் நாஜி சின்னங்கள் உள்ளிட்டவை பொது இடங்களில் பார்வைக்கு வைக்கப்படுவது ஜெர்மன் அரசால் தடை செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் கண்காட்சி நடந்துள்ளது. இதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக திட்ட மிட்டு செயல் பட்டுள்ளனர். எனினும், கண் காட்சியில் வைக்கப் படும் பொருட்களை நிபுணர் குழுவினர் பார்வையிட்டு, ஜெர்மன் அரசிடம் அறிக்கை அளித் தனர். அதன்பிறகே கண்காட்சி நடத்த அனுமதி கிடைத்தது. இதில், கைவினைப் பொருட்கள், சிறிய ஆபரணங்கள் மற்றும் கிராமத்துப் பெண்ணின் கை வண்ணத்தில் உருவான நீளமான திரைச் சீலைகள் என, அனைத்தும் கவனத்தை ஈர்த்தன.
ஹிட்லரை கொண்டாடிய ஜெர்மன் மக்கள் உபயோகித்த அனைத்துப் பொருட்களிலும் நாஜிக்களின் சின்னங்கள் வெகுவாக ஆக்கிர மித்துள்ளன. ஒரு தேவாலயத்திற்கு கூட்ட மாக வரும் மக்கள், அங்குள்ள பாதிரி யாரிடம் தங்கள் நாடு, மதம், கட்சியை நினைவு கூறும் வகையில், பரிசு வழங்குவதை, நீளமான கம்பளம் ஒன்றில் அழகாக வரையப்பட்டி ருந்தது பெரும்பாலான வர்களின் வரவேற்பை பெற்றது. மியூசியத்தின் பொறுப்பாளர் ஹன்ஸ் உல்ரிஸ் தோமர் கூறும் போது,"மக்களின் ஆதரவுதான் எதையும் முடிவு செய்யும். ஹிட்லர் ஒரு சாமானியன். மக்களின் பேராதரவு இல்லை யெனில் ஹிட்லர் கிடையாது. கலகக்காரர்களை சமூகத்தில் இருந்து தனியாக விலக்கி வைப்பதே, சமூக முன்னேற்றத் துக்கு நல்லது. இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் கலகக்காரர்கள் பின்னால் போவதை தடுக்க முடியும். எதிர்பாராவிதமாக, ஹிட்லர் காலத்தில் நாஜிக்கள் சமூகத்தின் உயர் நிலையில் இருந்ததால்தான், பேரழிவு ஏற்பட்டது' என்றார். இதற்கு முன்பு, 1995ம் ஆண்டில் ஹாம்பர்க்கில், நாஜிப் படையின் வெற்றிகள் குறித்து கண்காட்சி நடந்தது. அதில், படை வீரர்கள் சித்தரிக்கப்பட்ட விதம் பலத்த கண்டனத்துக் குள்ளானது.
ஆயிரக்கணக்கான புகைப் படங்கள், முக்கிய வீடியோக்கள் மற்றும் நாஜிக்களின் சீருடைகள் போன்றவை ஒரு தளத்திலும், ஹிட்லர் தொடர்பான பொருட் கள் மியூசியத்தின் கீழ்த்தளத்தில் உள்ள இருள் மிகுந்த அறையில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு, ஹிட்லரின் பெரிய அளவு புகைப்படம், ஆர்ப் பரிக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவே, தனது ஆதரவாளர்கள் மற்றும் நாஜி வீரர்களுடன் மூனிச் நோக்கிச் செல்லும் ஹிட்லர் போன்றவை சித்தரிக்கப் பட்டிருந்தன. வேலை கேட்டவர்களுக்கு நாஜிப் படையில் வேலை கொடுத்து, வன்முறையில் ஈடுபட வைத்தது போன்ற தகவல்களும், சித்ரவதை முகாம்களில் நரக வேதனை அனுபவிக்கும் சிறுவர் படங்களும் இடம் பெற்றிருந்தன.
""நினைத்ததைச் செய்து முடிக்கும் ராணுவ பலம், அபரிமிதமான பொருளாதார வளம் ஆகிய இரண்டும் இருந்ததால் தான், பல போர்கள் நடத்தவும், யூதர்களை அழிக்கவும் ஹிட்லர் தீவிரமாக செயல்பட்டான்,'' என்பது, மேற்கண்ட விஷயங்களில் இருந்து தெளிவாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக