வியாழன், 21 அக்டோபர், 2010

Unp ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாத நிஜமுகம

பலாலி விமான நிலையம் ஒரு காலத்தில் உள்நாட்டுப் போக்குவரத்துக்கு மாத்திரமன்றி இலங்கைக்கும் இந் தியாவுக்கும் இடையிலான போக்குவரத்துக்கும் பயன்பட்டது. இவ்விமான நிலையத்துக்கூடாக வடபகுதியிலிருந்து கொழும்புக்கும் இந்தியாவுக்கும் தினமும் பலர் பிரயாணம் செய்தனர். தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் விளைவாகப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்த விமான நிலையத்துக்கூடாகச் சிவிலியன் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. ஐக் கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இத் தடையுத்தரவு நடமுறைக்கு வந்தது. பிந்திய நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் சிவிலியன் போக்குவரத்து இடம் பெற்ற போதிலும் முப்பது வருடங்களுக்கு மேலாக வழமை நிலை இல்லை என்றே கூற வேண்டும்.
பலாலி விமான நிலையத்தைச் சர்வதேச தரத்துக்குப் புனரமைத்துச் சிவிலியன் போக்குவரத்துக்காகத் திறந்து விடுவதற்கு இன்றைய அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச தரத்துக்கு இந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டதும் அங்கிரு ந்தே வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வசதிகளைச் செய்து தரப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது. வடபகுதி மக்களுக்கு நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி வழமை போலக் குட்டை குழப்புகின்றது. பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக நடவடிக்கை எடுக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக கூறியிருப்பது விஷமத்த னமானதும் அற்பத்தனமானதுமாகும்.
இலங்கையின் எத்தனையோ பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாடுகளின் உதவியுடனேயே நிறைவேற்றப்பட் டன. இவ்விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் என்றோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் என்றோ பேதம் இருக்கவில்லை. எல்லா அரசாங்கங்களும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வெளி நாடுகளின் உதவியைப் பெற்றிருக்கின்றன.
பண்டாரநாயக ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையம் என்பன வெளிநாடுகள் இலங்கைக்கு வழங்கியநன்கொடைகள்.’ இவற்றை இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்கவில்லை. இலங்கை மக்களின் தேவைகளுக்காகவே இவை பயன்படுகின்றன.
பலாலி விமான நிலையத்தைப் புனரமைப்பதை ஒரு உதவியாக இந்தியா பொறுப்பேற்றிருப்பதையிட்டு ஐக்கிய தேசி யக் கட்சி தேவையற்ற விதத்தில் சந்தேகம் தெரிவிக்கின்றது. விமான நிலையத்தைப் புனரமைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதும் இந்தியாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ விற்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்பதும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரியாததல்ல. அரசியல் லாபத்துக்காக இப்படிப் பேசுகின்றது. இது அக்கட்சியின் இனவாத நிஜமுகத்தின் ஒரு வெளிப்பாடு.
கொள்கை வரட்சி ஏற்படும் போதெல்லாம் இனவாதத்தின் பக்கம் திரும்புவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழக்கமாகி விட்டது. பண்டா - செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான பிரசாரத்தில் அக்கட்சி இனவாதக் கனலைக் கக்கியது. இலங்கையின் வடபகுதியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழருக்குத் தாரை வார்ப்பதாகச் சித்தரிக்கும் கார்ட்டூன் படங்களை இரண்டு பொதுத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டது.
பலாலி விமான நிலையம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இப்போது காட்டும்பூச்சாண்டி’யும் இனவாத நோக்கம் கொண்டதே. பேரினவாத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் முயற்சி. அரசியல் அதிகாரத்துக்காக இனவாதத்தைக் கிளப்பிய ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவையே சந்தித்திருக்கின்றது. இப்போதும் அதே கதைதான்.
(தினகரன்)

கருத்துகள் இல்லை: