வியாழன், 21 அக்டோபர், 2010

R.Thurairatnam:உள்ளுராட்சி திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவளித்தவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்:

உள்ளுராட்சி திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவளித்தவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்: இரா.துரைரெட்ணம்
thurairetnam  கிழக்குமாகாண சபையில் இருப்பவர்கள் உள்ளுராட்சி திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் அது சிறுபான்மை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி 10 நாளைக்குள் இத் திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு பணித்தார் என்பதற்காக ஆதரவாக வாக்களிக்கப் போகும் ஆளும் தரப்பிற்கு சவால் விடுகின்றேன் என தெரிவித்தார்.
அனைவராலும் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியின் அனுமதிக்காக ஆளுனரிடம் வழங்கிய கிழக்கு மாகாண சபைக் கொடிக்குரிய அனுமதியை ஜனாதிபதியிடம் இருந்து 10 நாட்களுக்குள் பெற்றுக் காட்டுங்கள் என சாவல் விடுத்துள்ளளேன். உள்ளுராட்சி திருத்தச் சட்டம் நேற்று செவ்வாய் கிழமை கிழக்குமாகாண சபையில் நிறைவேற்றப் பட்டது.
மாகாணசபையில் உள்ள 37 உறுப்பினர்களில் ஆளும் தரப்பில் உள்ள 20 பேரில் 18 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் (2 பேர் சமூகமளிக்வில்லை) எதிர் தரப்பில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் நடுநிலை வகித்ததுடன் 6 பேரில் 5 தமிழ் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க எதிர்கட்சித் தலைவர் தயாகமகே சபையில் இருந்த போதும் வாக்களிக்கவில்லை.
இவ் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், சட்டத் திருத்தத்தை சபாநாயகர் சபையில் வைக்கையில் ஜனாதிபதி 10 தினங்களுக்குள் பரிசீலித்து நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு தெரிவித்து சமர்ப்பித்தார்.
இது தொடர்பாக 14 நாள் அறிவித்தலோ, 7 நாள் அறிவித்தலோ வழங்கப்படவில்லை. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக முதலமைச்சர் உட்பட ஆளும் தரப்பினர் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். சட்டம் சபையில் முன்வைக்கப்பட்ட போது முதலமைச்சர் உட்பட ஆளும்தரப்பினர் இது சிறுபான்மை சமூகத்திற்கு செய்யும் துரோகம் என தெரிவிக்கின்ற போதும் எதையும் செய்யமுடியாது ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றார்கள். இதே சட்டமூலம் முன்பு சபைக்கு வந்தபோது 37 உறுப்பினர்கள் எதிர்த்து திருப்பி அனுப்பப்பட்டது. ஆளும் தரப்பினர் மக்களிடம் வாக்கு கேட்டுப்போகும் போது திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிப்போம் என்று கேட்டுவிட்டு தற்போது ஆதரவாக வாக்களித்தது சிறுபான்மை மக்களுக்கு செய்யும் துரோகம். என சபையில் சுட்டிக்காட்டியதுடன் 10 நாட்களுக்குள் நிறைவேற்றித்தருமாறு ஜனாதிபதி பணித்தார் என்பதற்காக ஆதரவளிக்கும் ஆளும் தரப்பால் இரண்டுவருடம் ஜனாதிபதியின் அங்கிகாரத்திற்கு ஆளுனரிடம் சமர்ப்பித்த திருத்தப்பட்ட கிழக்கு மாகாணசபைக் கொடியை பெற முடியாமல் உள்ளீர்கள். முடியுமானால் ஆதரவளிக்கும் தரப்பு 10 நாட்களுக்குள் கொடிக்குரிய அங்கிகாரத்தை பெறுமாறு சவால் விடுகின்றேன் என சபையில் சவால் விடுத்துள்ளேன்.
இவ்விவாதத்தின்போது பின்வரும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எனது விவாதத்தில் தெரிவித்துள்ளேன்.
  1. தேசியரீதியான நிர்ணய ஆணைக்குழுவில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம், மலையகத்தினர் உள்ளடக்கப்பட வேண்டும்.
  2. 5வீத வெட்டுப்புள்ளி நீக்கப்பட வேண்டும். 3. மாநகரசபை வரவுசெலவுத் திட்டம் (இரண்டுதடவை) தோலிவியுறும் பட்சத்தில் மாநகரசபை கலைக்கப்பட்டு ஆணையாளரின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக மாகாணசபையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
  3. 06 மாதங்களுக்குள் மீள்தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.
  4. 70 : 30 வீதாசாரம் தொடர்பாக தெளிவின்மை காணப்படுகின்றது. திருத்தியமைக்கப்பட வேண்டும்.
  5. வட்டார எல்லைகள் பிரிக்கும் போது அங்குள்ள சிறுபான்மையினரின் நலன் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். என்பன உள்ளடங்கலாக 10 திருத்தங்களை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: