சனி, 23 அக்டோபர், 2010

தொடங்கியாச்சு ரஜினியின் ‘அவதார்’


      தனது இமயமலை பயணத்தை முடித்து சென்னை வந்த கையோடு சுல்தான் தி வாரியரை முடித்திட தயாராகிவிட்டார் ரஜினி. இதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளாராம் சௌந்தர்யாவுக்கு பதிலாக சுல்தானை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ள கே. எஸ். ரவிக்குமார். 


சௌந்தர்யா ரஜினிகாந்த் ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து தனது ஆக்கர் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்கி தயாரித்த ‘சுல்தான் தி வாரியர்’ சில பிரச்சினைகளின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப் பட்டது அனைவரும் அறிந்த பழைய சேதி.  

ஆக்கர் ஸ்டுடியோவிடமிருந்து சுல்தானை ஜெமினி லேப் வாங்கிய பிறகு சுல்தான் தி வாரியர் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதுதான் புதிய சேதி.

‘அவதார்’ பட பாணியில் சுல்தான் வளராவிருக்கிறதாம். “அவதார்” படம் பாதி அனிமேஷனிலும் மீதி நிஜ காட்சிகளாகவும் எடுக்கப்பட்டிருந்தது. அதே போல ரஜினி - விஜயலட்சுமி, வில்லன் ராகுல் கேஷம் ஆகியோர்களின் காட்சிகளை நிஜமாக எடுத்து, ஏற்கனவே சௌந்தர்யா எடுத்துள்ள அனிமேஷன் காட்சிகளுடன் இணைக்க போகிறாராம் கே.எஸ். ரவிக்குமார்.

 சுல்தான் தி வாரியர் புது அவதாரம் எடுத்துள்ளது போல,  பெயரிலும் மாற்றம் பெறவுள்ளது.“சுல்தான்”  என்னும் பெயரை “ஹரா” என மாற்றப் போகிறார்களாம். 

இப்படி புதிய மாற்றகளுடன் வேகமாக வளரத் தொடங்கிவிட்ட ‘ஹரா’ தமிழ் புத்தாண்டிற்கு முழு 3 டி படமாக வெளிவரவிருக்கிறதாம்.

கருத்துகள் இல்லை: