இம்மாதம் 23ம் இ 24ம் திகதிகளில் பிரான்சில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சர்வதேசக்கிளைகளின் பிராந்திய மாநாடு நடைபெறவுள்ளதென்பதை தோழமையுடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம். இம்மாநாட்டில் புலம்பெயர் தேசங்களில் கட்சிப்பணிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் மற்றும் கட்சியின் தலைமைக்குழு தோழர்களும் பங்குபற்றவுள்ளார்கள்.இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் சில காத்திரமான முடிவுகளை எடுக்கவுள்ளோம். 2வது நாள (24.10.2010) மதியம் 14.00 மணியளவில் எமது கட்சியுடன் தொடர்புடைய மாற்றுக்கருத்தாளர்கள் முற்போக்கு ஜனநாயக சக்திகள் போன்றவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்துவதாக தீர்மானித்துள்ளோம். இக் கலந்துரையாடலில் நீங்களும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் அழைக்கின்றோம்.
பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்.
மாநாடு நடைபெறும் இடம்
SALLE LOUIS PASTEUR, 9,RUE LOUIS CHOIX, 95140 - GARGES-LES-GONESSE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக