புதன், 20 அக்டோபர், 2010

இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் ரூ 12,28,950 கோடி

இந்தியாவின் வெளிநாட்டு கடன் மேலும் 4.1 சதவீதம் உயர்ந்து ரூ 12,28,950 கோடியானது.

நடப்பு நிதி [^] ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 1,080 கோடி டாலர் கடன் உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 48,600 கோடி!

குறுகிய கால அடிப்படையில் வாங்கப்பட்ட கடன்கள் 540 கோடி டாலரும், நீண்ட காலக் கடன்கள் 21,520 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளன.

வணிக கடன்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து பெற்ற கடன்களும் கணிசமாக உயர்ந்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி [^]யின் மாதாந்திர புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்த காலாண்டு ஆய்வை ரிசர்வ் வங்கி மேற்கொண்ட காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடனில், வெளிநாட்டு வணிக கடன்கள் 27.3 சதவீத அளவிற்கும், குறைந்த கால கடன்கள் 21.2 சதவீத அளவிற்கும், பன்னாட்டு அமைப்புகளிடமிருந்து பெற்ற கடன்கள் 16.4 சதவீத அளவிற்கும் இருந்தது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் [^] செய்த டெபாசிட் 17.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது என ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: