வியாழன், 21 அக்டோபர், 2010

UK.50,000 பொதுத் துறை பணிகளை குறைக்கும் இங்கிலாந்து: 10 லட்சம் பேர் வேலை இழக்கும்

இங்கிலாந்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 10 லட்சம் பேர் வேலை இழக்கவுள்ளனர். அடுத்த 4 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு செலவிடுவதை சுமார் 80 பில்லியன் பவுண்ட் வரை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நடக்கும் மிகப் பெரிய குறைப்பாகும்.

இந்தத் தகவலை இங்கிலாந்து கருவூலத் தலைமை அதிகாரி டானி அலெக்சாண்டர் தெரிவித்தார்.

செலவைக் குறைக்கும் வகையில் வரும் 2014-15 ஆண்டுகளில் பொதுத் துறை ஊழியர்கள் 490,000 பேரை பணியில் இருந்து நீக்கப்படும் என்று பட்ஜெட் பொறுப்பு அலுவலகம் கணித்துள்ளது.

வரும் வாரங்களில் ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் வேலை இழக்கவிருக்கின்றனர். அடுத்த 4 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு செலவிடுவதை சுமார் 80 பில்லியன் பவுண்ட் வரை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று அந்த ஆவணத்தில் இருந்தது.

பொதுத் துறை ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் சம்பளம் முடக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டில் இருந்து அவர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு அதிகம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை அதிகாரி ஜார்ஜ் ஆஸ்பர்ன் அரசின் விரிவான செலவு மறுபரிசீலனையின் விளைவுகள் பற்றி வரும் புதன்கிழமை அறிவிப்பார்.

நலத்திட்டங்களிலும் சுமார் 13 பில்லியன் பவுண்ட் குறைக்கப்படும் என்று அமைச்சர்கள் அறிவிக்கவிருக்கின்றனர். மொத்தத்தில் நலத்திட்ட சட்டவரைவில் அடுத்த 4 ஆண்டுகளில் 25 பில்லியன் பவுண்ட் வரை செலவுகள் குறைக்கப்படவுள்ளன.

இதன்படி சுகாதாரம், சர்வதேச முன்னேறத் துறைகளைத் தவிர அனைத்து அரசுத் துறைகளும் வரும் 2015-ம் ஆண்டிற்குள் செலவுகளை 40 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் நீதித் துறை மற்றும் உள்துறை நிதிகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: