வியாழன், 21 அக்டோபர், 2010

Mannar கத்தோலிக்க போதகரின் காம இச்சைக்கு அனாதைச் சிறுமிகள் இருவர் இரை.



 மன்னார் முருங்கன், செம்மன்தீவு பகுதியின் இயங்கிவந்த என் இரட்சகர் எனும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் குறிப்பிட்ட சிறுவர் இல்லத்தினை நாடாத்திவந்த சுமார் 48 வயதுடைய அமிர்தலிங்கம் எனும் கத்தோலிக்க போதகரின் காம இச்சைக்கு பலியாகியுள்ளனர். மேற்படி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யுட்சன் அவர்களின் உத்தரவின்பேரில் இல்லம் நீதிமன்றினால் சீல் வைக்கப்பட்டு அங்கு தங்கியிருந்த சிறுவர்கள் , பெற்றோர்களிடமும் : வேறு சில பராமரிப்பு இல்லங்களிலும் பாரமளிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் மன்னார் வைத்திய சாலையிலும் மற்றுமொரு சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு பெற்றோர்கள் உண்டு என்றும் ஒருவருக்கு பெற்றோர் இல்லை என்றும் தெரியவருகின்றது.

கடந்த 3 வருடங்களாக இயங்கிவந்த என் இரட்சகர் இல்லத்தின் பிரதானியான கத்தோலிக்க போதகரான அமிர்தலிங்கம் சம்பவத்தையடுத்து தலைமறைவாகியுள்ளார். மெம்மன்தீவு பிரதேசத்திலேயே தனது குடும்பத்தாருடன் தங்கியிருந்த போதகர் : பாடசாலை விடுமுறை தினங்களை காரணம் காட்டி சிறுமிகளை இல்லத்திலிருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இச்செயலை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. தனது குடும்பத்தாருடன் வசித்துவரும் இவர் குடும்பத்தினரை கொழும்பு மற்றும் எனைய மாவட்டங்களுக்கு அனுப்பி விட்டு இச்செயலை புரிந்துள்ளார்.

இச்சம்பவம் எவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது?

பாதிரியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக இல்லத்திலிருந்து சிறுமி ஒருத்தி தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகிய சிறுமியை பார்வையிட பெற்றோர் இல்லத்திற்கு சென்றபோது அவர் அங்கிருக்கவில்லை. பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்படுகின்றது. பெற்றோரின் தகவல்களின் அடிப்படையில் வவுனியாவில் சிறுமியின் உறவினர்கள் ஒருவர் வீட்டுக்கு சென்று சோதனையிட்டபோது சிறுமி அங்கிருந்துள்ளார். தலைமறைவானதற்கான காரணத்தை பொலிஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறுமியின் தகவலின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்ட இரண்டாவது சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த இடைவெளியில் பாதிரி தலைமறைவாகியுள்ளார். சிறுமி வவுனியாவில் கைதானமை : சிறுமியின் வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் எவ்வாறு பாதிரிக்கு கிடைத்தது? இத்தகல்கள் பொலிஸாரினூடாகவே கிடைக்கப்பெற்றதா என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? குற்றவாளி தப்பியோடுவதற்கான உடந்தைகள் யார்? பாதிரியின் குடும்பமும் தலைமறைவாகியுள்ளது. குடும்பம் இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததா அன்றில் பொதுஜனங்களின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்தில் தலைமறைவானார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

குறிப்பிட்ட பாதிரி வெளிநாட்டு உதவி வழங்கும் ஸ்தாபனங்களின் நிதி உதவியினை நேரடியாகப் பெற்றே இவ்இல்லத்தினை நாடாத்தி வந்ததாக அறியமுடிகின்றது. அத்துடன் அவரது மகன் ஒருவர் பிரித்தானியாவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

குறித்த இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 18 சிறுவர்களில் 16 சிறுவர்கள் நேற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் 8 பேர் பெற்றோரிடமும் எனையோர் மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினுடாக அன்னை இல்லம் : திருக்கேதீஸ்வரம் இல்லம் ஆகியவற்றிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: