திங்கள், 18 அக்டோபர், 2010

இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன

கொழும்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி...

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடனும், பெரும் ரசிகர் ஆரவாரத்துடனும் எந்திரன் திரையிடப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

ஆனால் தற்போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் எந்திரனுக்கு மவுசு குறைந்து விட்டது. இங்குள்ள பல்வேறு தியேட்டர்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டனர். கூட்டம் குறைந்து போனதே இதற்குக் காரணம்.

இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் இரு தியேட்டர்களுக்கு உரிமையாளரான தியாகராஜா என்பவர் கூறுகையில், படத்தைப் பார்க்க வரும் தமிழர்கள், இது தமிழ்ப் படம் போல இல்லையே, ஆங்கிலப் படம் போல இருக்கிறதே என்று கூறுகிறார்கள். அதை விட முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும், இதற்கும் பொருத்தமாக இல்லையே என்பதுதான் அவர்களது முக்கிய கவலையாக உள்ளது.

இந்த எண்ணம் சிலரிடம் மட்டும் ஏற்படவில்லை. ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பரவியுள்ளதால் படத்தைக் காண வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக எங்களது இரு தியேட்ட்டர்களில் போட்டிருந்த எந்திரனை, ஒரு தியேட்டரிலிருந்து எடுத்து விட்டோம் என்றார்.

பூபாளசிங்கம் என்ற தமிழர் கூறுகையில், இது தமிழ்ப் படம் போலவே இல்லை. வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்றோரின் காமெடி இல்லாமல் போனது படத்துக்கு மிகப் பெரிய பலவீனம். இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ்ப் படம் என்றால் அதில் காமெடியைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எந்திரனில் இது இல்லாதது பெரும் பலவீனம் என்றார்.

ஆரம்பத்தில் ரஜினி, ஐஸ்வர்யா படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது இல்லை என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து போய் விட்டது என்றும் கூறினார் பூபாளசிங்கம்.

இதை விட முக்கியமாக, எந்திரன் ரிலீஸான அடுத்த நாளே மலேசியாவிலிருந்து பெருமளவில் டிவிடிக்கள் வந்து குவிந்து விட்டனவாம். இதுவும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை குறைந்து போனதற்கு முக்கியக் காரணமாம். யாழ்ப்பாணத்தில் எந்திரன் திருட்டு விசிடியும், டிவிடியும் தாராளமாக கிடைக்கிறதாம்.

தமிழ் எந்திரன் நிலை இப்படியிருக்க, இந்தி ரோபோவுக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சியுள்ளதாம். அதாவது இந்தி ரோபோவுக்கு சுத்தமாக வரவேற்பில்லையாம். இந்தியில் பார்ப்பதை விட தமிழிலேயே பார்க்கலாம் என்பதால் இந்தி ரோபோவைப் பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லையாம். மேலும், இந்திப் படம் என்றால் ஷாருக் கான் உள்ளிட்டோரின் படங்களைத்தான் அங்குள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்களாம். அதேசமயம், ரஜினியை தமிழ்ப் பட நடிகராக மட்டுமே பார்ப்பதாகவும், அதிலும் காமெடியில் கலக்கும் ரஜினியைத்தான் அதிகம் ரசிப்பதாகவும் தியாகராஜா கூறுகிறார்.

பதிவு செய்தவர்: சிவா
பதிவு செய்தது: 17 Oct 2010 3:01 pm
பொய் பொய் நம்பவேண்டாம் , நன் கொழும்பில் வசிக்கிறேன், இங்கு எந்திரன் படம் நல்லா தான் போகுது , வதந்திகளை நம்பாதீர்

பதிவு செய்தவர்: ராம்
பதிவு செய்தது: 17 Oct 2010 12:38 pm
இலங்கை மட்டும் இல்ல இங்கும் எந்திரன் க்கு மவுசு இல்லை eanga ஊரு ல 10 நாள் குட இந்த படம் ஓடல சன் டிவி ல மட்டும் தான் இந்த படம் சூப்பர் ஹிட்

பதிவு செய்தவர்: அரி நண்ப
பதிவு செய்தது: 17 Oct 2010 11:08 am
பாவம் ரஜனி அவர் என்ன செய்வார். அவரின் நடிப்பு அற்புதம். அனால் படத்தை தயாரித்தது கருநரி குடும்பம் .அதுதான் ஒட்டு மொத்த தமிழர்களும் புறக்கணித்து விட்டார்கள்.

பதிவு செய்தவர்: எளியவன்
பதிவு செய்தது: 17 Oct 2010 10:15 am
அது ரத்த பூமி அங்கு போய் எந்திரன் டூயட் பாடினால் எப்படி ரசிக்கமுடியும்

பதிவு செய்தவர்: கமல் வெறியன்
பதிவு செய்தது: 17 Oct 2010 9:40 am
தமிழ் நாட்டை தவிர மற்ற எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் இந்த குடும்பத்தினர் மீடியாவை கைப்பற்றி விட்டதால், மெண்டல் ரசிகர்களுக்கு இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை.
பதிவு செய்தவர்: குடிமகன்
பதிவு செய்தது: 17 Oct 2010 6:39 am
கிழவன்க்கும் கிழவிக்கும் அவளுதன் ஐயா மௌசு இது தெரியாமல் பாவும்

பதிவு செய்தவர்: இலங்கை
பதிவு செய்தது: 17 Oct 2010 5:51 am
இலங்கை மக்கள் இன்னும் நாகரீக உலகத்திற்கு வரவில்லை

பதிவு செய்தவர்: மாயா
பதிவு செய்தது: 17 Oct 2010 4:31 am
தமில்ஸ் ப்ளீஸ் வாட்ச் on you tube "Tamil Eelam Airlines" lands in london airport. Also wish our world Tamils first Prime Minister Hon. V. Rudrakumaran. முதல் தமிழ் பிரதம மந்திரி மேதகு விசுவநாதன் ருத்ரகுமாரன்
பதிவு செய்தவர்: லூசு
பதிவு செய்தது: 17 Oct 2010 11:59 am
நிஜமாவே நீங்க லூசு தாண்டா! நீ என்ன மினிஸ்டர். கிசு கிசு துறையா இல்லை அம்மா,, தாயே.. காப்துங்கம்மா துறையா

பதிவு செய்தவர்: மாயா
பதிவு செய்தது: 17 Oct 2010 4:26 am
தமில்ஸ் ப்ளீஸ் வாட்ச் on you tube "Tamil Eelam Airlines" lands in london airport. Also wish our world Tamils first Prime Minister Hon. V. Rudrakumaran. முதல் தமிழ் பிரதம மந்திரி மேதகு விசுவநாதன் ருத்ரகுமாரன்

பதிவு செய்தவர்: கோவாலு
பதிவு செய்தது: 17 Oct 2010 4:19 am
எதுக்குப்பா இப்டி குமுறீங்க? கோடிக்கணக்கான தமிழ் நாட்டு காரன் கலக்சன கவனிங்க பர்ஸ்டு ! சிலோன் எங்கிறது சும்மா ஜூ ஜூ பி ! அவுங்க ஊரு தமிழருக்கு சோத்துக்கே வழி இல்ல , நம்ம சூப்பர் ஸ்டார் படம் ,நூறுநாள் ஓட வைக்குரதையா பெரிசா நெனைப்பாங்க ? தமிழ் நாட்ட தவுர எல்லா ஊர்லயும். இந்த பய புள்ளைங்க எல்லாருமே கூத்தாடிங்கதான் !

பதிவு செய்தவர்: sri
பதிவு செய்தது: 17 Oct 2010 3:04 am
இந்திரன் பிலிம் உங்கட தமிழ்ல புட்டுகிசி

பதிவு செய்தவர்: நெல்லை
பதிவு செய்தது: 17 Oct 2010 3:01 am
எந்திரன கிடப்பில போட்டு எல்லோரும் பிரபாகரன் பின்னால வரிசையில நிக்கினம். ஒரு குண்டு வெடிக்க சிங்களவன் துண்ட காணம் துணிய காணம்னு தமிழ் பகுதிய விட்டு ஓடிடுவான். அதுக்கு பிறகு இருக்கு ஆப்பு எல்லார்க்கும். ஒட்டுக்குழுக்கள் சிங்கள பகுதிக்கு ஓட மிச்ச ஒட்டுக்குழுவ போட நம்ம தலைவர் தமிழ் ஈழம் தருவார்.

பதிவு செய்தவர்: இது தான் உண்மை
பதிவு செய்தது: 17 Oct 2010 12:09 am
இந்த நியூஸ் சுத்த பொய்! என் தம்பி இன்னும் டிக்கெட் கெடைக்கலைன்னு சொன்னான். அதுவுமில்லாமே திருட்டு DVD யில் படம் கிடைப்பதை வச்சு மோசமான படம்னு சொல்ல முடியாது. தியேட்டர் காரனுக்கு வரும் லாபத்துக்கு ஆப்பு வைச்சு அவனவன் பணம் சம்பாரிக்கிரதுக்கு சிலர் கையாள்கிற யுக்தி இது. யார் என்ன சொன்னாலும் எந்திரன் இலங்கையில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.

பதிவு செய்தவர்: Yaaro
பதிவு செய்தது: 17 Oct 2010 12:02 am
rajani didnt go to sri lanka for the film festival. so it is the work of the rajapakse government warning the people not to go to the movie. this true in jaffna, the army and douglas sccons are warning the people not to go for the movie.

பதிவு செய்தவர்: உலகை வெறுத்தவன்
பதிவு செய்தது: 16 Oct 2010 11:53 pm
ஓவர் வேலம்ம்பரம் ஒடம்புக்கு ஆகாது கண்ணு

கருத்துகள் இல்லை: