பொய்பிரச்சாரங்களை முறியடித்து இன ஒற்றுமையை ஏற்படுத்துவோம்.
கேட்க சந்தோஷமாக இருக்கிறது. விடுமுறைக்கு புலம்பெயர்நாடுகளில் இருந்து இலங்கைக்கு சென்ற தமிழர்கள் சொல்கின்ற விடயங்கள் யதார்த்தமானவை. புலிகளின் ஊடகங்கள் வெளியிடுகின்ற செய்திகளையெல்லாம் பொய்யாக்கி தமிழர்கள் இனி விரும்பிச்செல்கின்ற நாடு இனி இலங்கைதான். இராணுவ கெடுபிடிகள், விமானநிலையத்தில் இருட்டறை, தமிழர்களை கடத்துகிறார்கள் என புலிகளின் ஊடகங்கள் கடந்த இருமாதங்களுக்கு முன் சொன்ன செய்திகளை தமிழ்மக்கள் இனியும் நம்பத்தயாராக இல்லை.
யுத்தம் முடிவடைந்த பின் தமிழர்கள் புலம்பெயர்நாடுகளில் இருந்து அதிகமாக தமது கோடை விடுமுறைக்கு இலங்கைக்கு சென்று வந்துள்ளனர். புலம்பெயர்தமிழர்கள் தாய்மண்ணுடன் இறுக்கமான தொடர்புகளை இனி பேணுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது-.
வரி வசூலிக்க புலிகளின் சோதனைச்சாவடிகளோ நந்தவனமோ அங்கு கிடையாது. மூவின மக்களும் தங்கு தடையின்றி எங்கும் பயணிக்கலாம். தடை எதுவும் கிடையாது. இலங்கைக்குள் இருதெசங்கள் இனி கிடையாது. புலிகளின் மன்னராட்சி கொடுமைகள் முடிவுபெற்று விட்டது. தமிழர்கள் மூச்சு விட நல்ல சந்தர்ப்பம் இது.
புலிகளின் ஊடகங்கள் புலம்பெயர்நாடுகளில் இருந்து புலம்பிக்கொண்டிருக்கட்டும். அதையிட்டு கவலை கொள்ளத்தேவையில்லை. மக்களின் பணத்தில் திண்டது சமிக்க ஜெனிவா நோக்கி நடைப்பயணம் செய்யட்டும். யாரும் என்ன ஏது என்று கேட்கமாட்டார்கள். இன்னும் எத்தனையோ மக்களை ஈர்க்காத போராட்டங்களைச் செய்யட்டும். அதைப்பற்றி கவனிப்பார் யாரும் இருக்க மாட்டார்கள். ஆயிரக்கணக்கில் புலிகளுக்கென திரண்ட கூட்டம் ஐம்பது பேர் அளவில் சுரங்கி விட்டது. மக்கள் இனி இவர்களிற்குப் பின்னால் அணி திரளப்போவதில்லை. போங்கடா நீங்களும் உங்கட உப்புசப்பற்ற போராட்டங்களும் என தங்கள் அலுவல்களை பார்க்க வெளிக்கிட்டார்கள்.
விடுமுறைக்கு சென்று வந்துள்ள மக்கள்கூறுகின்ற விடயங்கள் கல்யாண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள், சாமத்திய சடங்குகள் பொதுநிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் புலிகளின் பொய்களை அம்பலப்படுத்துகின்றன. மக்களின் பணத்தில் வயிறு வளர்த்தவர்கள் இலங்கையில் உள்ள யதார்த்த நிலமைகளை பொய்யெனக் கூறினாலும் அதை இனி யாரும் சீரியசாக எடுக்கமாட்டார்கள்.
மாறிவருகின்ற உலக மாற்றத்திற்கேற்ப இலங்கையின் நிலமைகளும் மாறத்தொடங்கியுள்ளன. தமிழ் சிங்கள முஸ்லீம்கள் இனி ஒரு யுத்த நிலவரத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. தென்பகுதியில் இருந்து வடக்கிற்கு சுற்றுலாப்பயணம் செய்து தமிழர்கள் வீடுகளில் தங்கும் சிங்கள மக்கள் உண்மை நிலமைகளை புரிந்து கொண்டுள்ளார்கள். மூவின மக்களும் இணைந்து வாழ்கின்ற ஒரு சூழல் உருவாகி வருவதை விரும்பாத புலிகள் புலம்பெயர்நாடுகளில் பொய்ப்பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்வார்கள். தமிழ்சிங்கள மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி அதில் குளிர்காய தயாராகும் இந்த நயவஞ்சக கூட்டத்தை ஒட்டுமொத்த தமிழ்மக்கள் நிராகரித்து விடவேண்டும். அதுவே இன்றைய தேவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக