சனி, 2 ஜூன், 2018

புறக்கணிக்கப்பட்ட பட்டியல் வெளியேற்றமும் ... புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும்

Murugan Kanna :  பள்ளர் சமுகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் அஜன்டாவை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய தேவேந்திர சங்கங்களும், அமைப்புகளும் மற்றும் பசுபதிபாண்டியன் போன்ற ஒரு சிலர் அறியாமையிலும் பேசி வந்தனர்.
கடந்த ஓராண்டு காலமாக புதியதமிழகம் கிருஷ்ணசாமியும் பேசி வருகிறார். ஆனால் கடந்த காலங்களில் மற்றவர்கள் பேசும் போது அரசியல் ரீதியாக பெரியளவில் பேசப்படவில்லை. கிருஷ்ணசாமி பேசிய பின்பே அரசியல் கருத்தாக உருவெடுத்தது. அதே சமயம் டாக்டர் கிருஷ்ணசாமி பட்டியல் வெளியேற்ற கருத்தை பேசிய பின்பே இந்த அஜன்டா ஆர்.எஸ்.எஸ் திட்டம் என்று பொதுவெளியில் அப்பட்டமாக தெரியவந்தது. இந்த வகையில் இந்த அஜன்டா பள்ளர் சமுக மக்களுடையது அல்ல ஆர்.எஸ்.எஸ் திட்டம் என்று அறிய செய்த கிருஷ்ணசாமியை பாராட்டுவோம்.
பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை புதியதமிழகம் கட்சி தங்களது அரசியல் இயக்க கோரிக்கையாக முன் வைக்கும் போது அதனோடு ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய தேவேந்திர சங்கங்களும் இணைந்து கொன்டது ஆனால் மாறாக மக்கள் இணையவில்லை. பல்வேறு இயக்கங்கள் சார்பாக எதிர்ப்பு பிரச்சாங்கள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளும் வலுவாக நடைபெற்றது.

பட்டியல் வெளியேற்ற கோரிக்கை விவாதமாகும் அதே வேளையில் பள்ளர்கள் மீதான ஓடுக்குமுறைகளும் சாதிய படுகொலைகளும் சாதி ஆணவப்படுகொலைகளும் தொடர்ந்து நிகழ்ந்த கொன்டே இருந்தும் வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சிவகங்கை மாவட்ட கச்சநத்தம் கிராமத்தில் தொடர் சாதிய வன்கொடுமைகள் நிகழ்ந்ததோடு கடந்த 28-05-2018 அன்று கொடுரமாக கொலைவெறி தாக்குதல்கள் நடந்து மூன்று உயிர் பலி மற்றும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கச்சநத்தம் கிராமத்தில் நிகழ்ந்த கொடுரமானது தேசிய அளவில் மிக பெரிய சாதிய கொடுரமாக பார்க்ப்படுகிறது. இந்த கொடுமையை கண்டித்து மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே 29 காலை முதல் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்திற்குட்பட்டு பல்வேறு கோரிக்கைளோடு நடந்த காத்திருப்பு போராட்டத்தின் மூலமாக பல்வேறு கட்ட பேச்சி வார்த்நைகளுக்கு பின்னர் 31 மாலை கோரிக்கைகள் ஏற்கப்பட்டு போராட்டம் நிறைவு பெற்று 1-06-2018 அன்று மதியம் இறந்தவர்களின் உடல்கள் பெறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கச்சநத்தம் கிராம மக்களுக்கான போராட்டத்தில் பட்டியல் வெளியேற்றம் பேசும் இயக்கங்களில் புதியதமிழகம் தவிர்த்து மற்ற இயக்கங்கள் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் படியான கோரிக்கையை ஏற்றுக் கொன்டனர். புதியதமிழகம் கட்சி மட்டுமே எஸ்சி/எஸ்டி சட்டபடியான கோரிக்கை வேண்டும் என்று நிராகரித்ததோடு மக்களின் உணர்வுகளுக்கும மதிப்பளிக்காமல் நடந்து கொன்டனர். இதில் மூன்றாம் நாள் மதியம் போராட்டம் நடைபெறும் போது டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை வந்து மருத்துமணையில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து விட்டு மாவட்ட ஆட்சியரையும பத்திரிக்யைாளரையும சந்தித்து இரு தரப்பு மோதல் என்று தெரிவித்து விட்டு போராட்டம் நடத்தும பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியாமல் சென்று விட்டார். இதன் மூலம் பள்ளர்கள் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை மக்களிடம் இல்லை என்றும மக்களின் உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டது என்றும் சிலரின் ஆதாயத்திற்கான கோரிக்கை என்றும் தெரிந்துவிட்டது.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத இயக்கமும் தலைமையும் மக்களிடம் இருந்து அன்னியப்படும் என்பதே உண்மை. அது பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையும் அதனை முன்னெடுத்த புதியதமிழகம் கிருஷ்ணசாமியும் அன்னியப்பட்டு நிற்பதின் மூலமாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: