தினமலர்: கர்நாடகா முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ், விவசாய கடன் தள்ளுபடி,
கர்நாடகா தேர்தல் வாக்குறுதி, பிரதமர் மோடி , குமாரசாமி ராஜினாமா , முதல்வர் குமாரசாமி, குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளம்,பெங்களூரு : தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக விவசாயிகள் சார்பில் பெங்களூரு தவிர்த்து கர்நாடகாவின் மற்ற பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று டில்லி செல்கிறார். பிரதமருடனான சந்திப்பு காலை 11.30 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கர்நாடக மக்கள் என்னையும், எனது கட்சியையும் புறக்கணித்தனர். தனி பெரும்பான்மை கிடைக்கும் என்று தான் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தேன். விவசாய சங்க தலைவர்களிடமும் இது பற்றி பேசினேன். அவர்கள் எந்த அளவிற்கு என்னை ஆதரித்தனர்.
இது சுதந்திரமான அரசு கிடையாது. இது தொடர்பாக காங்., தலைவர்கள் சிலருடன் பேசி உள்ளேன். நான் காங்.,குக்கு தான் கடமைப்பட்டவன். 6.5 கோடி கர்நாடக மக்களுக்கு அல்ல. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் பேச்சுக்கே இடமில்லை. எனக்கு அதிக அழுத்தம் உள்ளதால், மக்கள் எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
மாநிலத்தின் நிதி நிலைமையை தெரிந்து கொண்டு, அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு இது குறித்து முடிவு செய்வேன். ஒரு வாரத்திற்குள் விவசாய கடன் குறித்து முடிவு செய்வேன் இல்லாவிட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக