மின்னம்பலம் :உள்ளிட்ட விலங்குகள் மூலம் நிபா வைரஸ் பரவவில்லை என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் நிபா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இரண்டு செவிலியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்த நிலையில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கல்யாணி (62) என்ற பெண் நேற்று (மே 26) உயிரிழந்தார். இதனால் நிபா காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே நிபா வைரஸ் எதனால் பரவுகிறது என்று நடத்தப்பட்ட ஆய்வில் விலங்குகள் மூலம் பரவவில்லை என்பது தெரியவந்துள்ளது.
போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீஸ் என்ற நிறுவனத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டருகே உள்ள கிணற்றில் இருந்த வௌவால்களின் ரத்த மாதிரிகள், நான்கு ஆடுகளின் ரத்த மாதிரிகள், ஐந்து மாடுகளின் ரத்த மாதிரிகள், எட்டு பன்றிகளின் ரத்த மாதிரிகளும் மருத்துவச் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் எதிலும் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதவிர பல விலங்குகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிலும் நிபா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்ற காரணியைக் கண்டறிய முடியாத நிலை இருப்பதால் கூடுதலாகச் சில வௌவால்களைச் சேகரித்து சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வகத்தின் நச்சுயிரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக