tamil.oneindia.com/authors/lakshmi-priya.: சிவகங்கை: கச்சநத்தம் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சந்திரசேகரன் காலையில் நன்றாக இருந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். இங்கு கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதையடுத்து ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சிலர் கச்சாநத்தம் பகுதியில் உள்ளவர்களை வீடு புகுந்து கடுமையாக தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சந்திரசேகரன் என்பவர் இன்று மதியம் பலியாகிவிட்டார்.
காலையில்
நன்றாக இருந்த சந்திரசேகரன் திடீரென மரணித்துவிட்டார் என்பது குறித்து
மனித உரிமைகள் ஆர்வலர் எவிடென்ட்ஸ் கதிர் தனது பேஸ்புக்கில்
பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில்,கச்சநத்தம் கிராமத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஆறு பேர் கடும் காயத்துடன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை எடுத்துவந்த சந்திரசேகர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.கேட்கவே கடும்துயரமாக இருக்கிறது.
சம்பவம்
நடந்த மறுநாள் சந்திரசேகர் அவர்களை சந்தித்தேன்.சார்..வீட்டிற்கு வெளியே
உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.ஒரு கும்பல் என்னை சுற்றி வளைத்து கொண்டு
உங்களை கொல்லாமல் விட மாட்டோம் என்று கூறி அரிவாளால் வெட்டினார்கள்.கொஞ்சம்
அசந்து இருந்தால் என்னை கொன்று இருப்பார்கள் சார் என்று கூறி கண்
கலங்கினார்.
உங்களை கொன்றுவிட்டார்களே சந்திரசேகர்.இந்த கேடுகெட்ட சாதி சமூகம் நம் பிணங்களை அடுக்கி வைக்கவே உத்தரவு இடுகிறது. லாரி ஓட்டுனராக பணியாற்றும் சந்திரசேகர் அவர்களுக்கு தவமணி என்கிற மனைவியும் 6 வயதில் மகளும் 5 வயதில் மகனும் இருக்கின்றனர் என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். இங்கு கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதையடுத்து ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சிலர் கச்சாநத்தம் பகுதியில் உள்ளவர்களை வீடு புகுந்து கடுமையாக தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சந்திரசேகரன் என்பவர் இன்று மதியம் பலியாகிவிட்டார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில்,கச்சநத்தம் கிராமத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஆறு பேர் கடும் காயத்துடன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை எடுத்துவந்த சந்திரசேகர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.கேட்கவே கடும்துயரமாக இருக்கிறது.
உங்களை கொன்றுவிட்டார்களே சந்திரசேகர்.இந்த கேடுகெட்ட சாதி சமூகம் நம் பிணங்களை அடுக்கி வைக்கவே உத்தரவு இடுகிறது. லாரி ஓட்டுனராக பணியாற்றும் சந்திரசேகர் அவர்களுக்கு தவமணி என்கிற மனைவியும் 6 வயதில் மகளும் 5 வயதில் மகனும் இருக்கின்றனர் என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக