புதன், 30 மே, 2018

7 பேரின் உடல்களுக்கு மறு உடற்கூறாய்வு.. எஞ்சிய 6 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை கூடாது- உயர்நீதிமன்றம்

Chennai HC ordered to not to do post mordem for remaining 6 bodies who dead in firing tamil.oneindia.com/authors/lakshmi-priya.:சென்னை: துப்பாக்கிச் சூட்டில் பலியான 7 பேரின் உடல்களுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் எஞ்சிய 6 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் செய்யாவிட்டாலும் பதப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை செய்வது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாஸ்கர், டீக்காராமன் ஆகிய அமர்வு விசாரணை நடத்தியது.


அப்போது நீதிபதிகள் கூறுகையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 7 பேர் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேருக்கு மறுஉடற்கூறாய்வு நடத்த வேண்டும்.
உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். 3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். உடற்கூறாய்வுக்கு பிறகு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்தால் தடயங்கள் அழிக்கப்படும் என மனுதாரர் வாதம் செய்ததால் எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று நீதிபதிகள் உத்தரவை மாற்றி பிறப்பித்தனர். முன்னதாக எஞ்சிய 6 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நிலையில் மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்ததால் தனது உத்தரவை மாற்றி வழங்கினர்.

கருத்துகள் இல்லை: