மாலைமலர் :13 பேர் பலியான தூத்துக்குடி
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு
நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த
22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர்
கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற
கேள்விக்கு இதுவரை பதில் தெரிவிக்கப்படாமலேயே இருந்தது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இது
தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், 2
துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின்
முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்முறை ஏற்பட்ட நிலையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக